அமெரிக்க ஹோட்டலின் மோசமான விருந்தோம்பல் குறித்து பதிவிட்ட இந்திய யூடியூபருக்கு, ஹோட்டல் நிர்வாகம் இலவசமாக மேம்பட்ட வசதிகளை அளித்துள்ளது.
பெங்களூருவைச் சேர்ந்த இரண்டாம் ஆண்டு எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் மாணவரான யூடியூபர் இஷான் சர்மா, அமெரிக்காவின் லாஸ் வேகாஸில் உள்ள சீசர் பேலஸ் ஹோட்டலில் தங்குவதற்காகச் சென்றிருந்தார்.
ஆனால், ஹோட்டலின் விருந்தோம்பல் செயல்களினால் போதிய திருப்தி அடையவில்லை என்று இஷான், தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
சாதாரண ஓர் ஐந்து நட்சத்திர ஹோட்டலில் வாடிக்கையாளர்களின் உடைமைகளை பணியாளர்களே எடுத்துச் செல்வர். ஆனால், சீசர் ஹோட்டலில் அவ்வாறு செய்யவில்லை.
அதுமட்டுமின்றி, 200 டாலர் வாடகையாக வாங்கும் ஹோட்டல் நிர்வாகத்திடம், ஒரு டம்ளர் நீர் கேட்டதற்கு, 200 மி.லி. தண்ணீர் பாட்டிலுக்கு 14.99 டாலர் தரவேண்டும் என்று கூறியுள்ளனர்.
இந்த ஒரு ஹோட்டலில் மட்டுமல்ல; அமெரிக்காவில் நான் தங்கிய நிறைய ஹோட்டல்களில் அப்படித்தான். அந்த வகையில், இந்திய ஹோட்டல்கள் பெருமைக்குரியவையே என்று இஷான் ஆக. 12, திங்கள்கிழமையில் தெரிவித்திருந்தார்.
ஹோட்டலின் செயல் குறித்த இஷானின் எக்ஸ் பதிவு 4,000க்கும் மேற்பட்ட லைக்குகளையும், சுமார் 450 கருத்துகளையும் பெற்றது. இதனையடுத்து, இஷானின் பதிவு பலராலும் பகிரப்பட்டு, சமூக ஊடகங்களில் வைரலாகிய நிலையில், இஷானின் கருத்துக்கு ஆதரவும் எதிர்ப்பும் கலவையான கருத்துகள் தெரிவிக்கப்பட்டு வந்தன.
இந்த நிலையில், இஷானின் பதிவைக் கண்ட சீசர் ஹோட்டல் நிர்வாகம், அடுத்த நாளே (ஆக. 13) அவருக்கு மேம்பட்ட வசதிகளை, இலவசமாகச் செய்து கொடுத்தது.
இதனைத் தொடர்ந்து, சீசர் ஹோட்டலுக்கு நன்றி தெரிவித்த இஷான், ``சீசர் ஹோட்டலுக்கு நன்றி. நீங்கள் என் பேச்சைக் கேட்டதில் மகிழ்ச்சி. இந்த முறை ஊழியர்கள் மிகவும் உதவியாக இருந்தனர்’’ என்று தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இஷான் நன்றி தெரிவித்து பதிவிட்ட பதிவுக்கும் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதில் ஒருவர், ``இந்த முறை ஹோட்டல் உங்களுக்கு நீர் வழங்கியிருக்கும் என்று நம்புகிறேன்’’ என்று கருத்து கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.