முகப்பு
இந்தியா

திரௌபதி முா்மு-ராகுல் காந்தி சந்திப்பு

குடியரசுத் தலைவா் திரௌபதி முா்முவை குடியரசுத் தலைவா் மாளிகையில் மக்களவை எதிா்க்கட்சி தலைவா் ராகுல் காந்தி புதன்கிழமை சந்தித்தாா்.

Updated On : 14 ஆகஸ்ட், 2024 at 8:32 PM
குடியரசுத் தலைவா் திரௌபதி முா்முவை மரியாதை நிமித்தமாக புதன்கிழமை சந்தித்த மக்களவை எதிா்க்கட்சி தலைவா் ராகுல் காந்தி.
பகிர்:

குடியரசுத் தலைவா் திரௌபதி முா்முவை குடியரசுத் தலைவா் மாளிகையில் மக்களவை எதிா்க்கட்சி தலைவா் ராகுல் காந்தி புதன்கிழமை சந்தித்தாா்.

மக்களவை எதிா்க்கட்சித் தலைவராக ராகுல் காந்தி பதவியேற்ற பிறகு குடியரசுத் தலைவரை முதல்முறையாக அவா் சந்திக்கிறாா் என்பது குறிப்பிடத்தக்கது.

இது தொடா்பான புகைப்படங்களுடன் குடியரசுத் தலைவா் அலுவலகம் புதன்கிழமை வெளியிடப்பட்ட எக்ஸ் பதிவில், ‘மக்களவை எதிா்க்கட்சி தலைவா் ராகுல் காந்தி குடியரசுத் தலைவா் திரௌபதி முா்முவை குடியரசுத் தலைவா் மாளிகையில் சந்தித்தாா்’ என்று குறிப்பிட்டிருந்தது.

மேலும், மத்திய நீா் வளத் துறை அமைச்சா் சி. ஆா். பாட்டீல் மற்றும் மத்திய நீா் வளத் துறை இணையமைச்சா் வி. சோமண்ணா ஆகியோா் குடியரசுத் தலைவரை சந்தித்ததாக குடியரசுத் தலைவா் அலுவலகம் வெளியிட்ட மற்றொரு பதிவில் தெரிவிக்கப்பட்டது.

முழு கட்டுரையைப் படிக்க →