முகப்பு
இந்தியா

கோவா: பறவை மோதியதால் மும்பை விமானம் ரத்து!

இன்று காலையில் விமானத்தின்மீது பறவை மோதியதால் கோவாவில் இருந்து மும்பை செல்லவிருந்த ஏர் இந்தியா விமானம் ரத்து

Updated On : 14 ஆகஸ்ட், 2024 at 6:16 AM
கோப்புப் படம்
பகிர்:

கோவாவில் விமானத்தின்மீது பறவை மோதியதால் கோவாவில் இருந்து மும்பை செல்லவிருந்த ஏர் இந்தியா விமானம் ரத்து செய்யப்பட்டது.

தெற்கு கோவாவில் உள்ள தபோலிம் விமான நிலையத்திலிருந்து ஏர் இந்தியா விமானம் 116 பயணிகளுடன் மும்பைக்கு செல்ல, இன்று (ஆக. 14) திட்டமிடப்பட்டிருந்தது.

ஆனால், எதிர்பாராதவிதமாக, இன்று காலை 6.45 மணியளயில் விமானத்தின் மீது பறவை மோதியதில், விமானத்தின் இன்ஜினில் இருந்து புகை வெளியேறத் தொடங்கியது. இதனையடுத்து, விமானம் புறப்படுவது தவிர்க்கப்பட்டு, நிறுத்தப்பட்டது.

விமான நிலைய அதிகாரி இயக்குநர் எம்.சி. ஜெயராஜன் தெரிவித்ததாவது, ``விமானத்தின்மீது பறவை மோதியது அறிந்தவுடன், விமானம் உடனடியாக நிறுத்தப்பட்டது.

மேலும், இதுகுறித்து விசாரணை மேற்கொள்வதற்காக, விமானம் வளைகுடாவில் நிறுத்தப்பட்டுள்ளது” என்று கூறினார்.

முழு கட்டுரையைப் படிக்க →