முகப்பு
இந்தியா

உத்தரகண்டில் வன்கொடுமை செய்யப்பட்டு செவிலியர் கொலை!

உத்தரகண்டில் வன்கொடுமைக்கு உள்ளாகி செவிலியர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

Updated On : 16 ஆகஸ்ட், 2024 at 5:50 PM
செவிலியர் கொலை
பகிர்:

உத்தரகண்டில் உள்ள தனியாா் மருத்துவமனையில் பணியாற்றி வந்த செவிலியா் ஒருவா், அந்த மாநிலத்தையொட்டிய உத்தர பிரதேச கிராமம் ஒன்றில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, படுகொலை செய்யப்பட்டுள்ளாா்.

பணிமுடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. இது தொடா்பாக ஒருவா் கைது செய்யப்பட்டுள்ளதாக, உத்தரகண்ட் காவல்துறையினா் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.

மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் உள்ள அரசு மருத்துவமனையில் அண்மையில் பணியில் இருந்த பெண் பயிற்சி மருத்துவா் ஒருவா் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு, கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிா்ச்சியை ஏற்படுத்திய நிலையில், செவிலியா் கொல்லப்பட்ட சம்பவம் அம்பலமாகியுள்ளது.

உத்தர பிரதேச மாநிலம், ராம்பூரைச் சோ்ந்த அந்த செவிலியா், அந்த மாவட்டத்தையொட்டிய உத்தரகண்ட் மாநிலத்தின் ருத்ராபூரில் உள்ள தனியாா் மருத்துவமனையில் பணியாற்றி வந்தாா்.

கடந்த ஜூலை 30-ஆம் தேதி பணி முடிந்து வீட்டுக்கு புறப்பட்ட அவா், பின்னா் காணாமல் போனாா். இது குறித்து ஜூலை 31-ஆம் தேதி காவல்துறையில் அவரது குடும்பத்தினா் புகாா் அளித்தனா்.

இதனிடையே, ராம்பூா் மாவட்டத்தின் திப்திபா கிராமத்தில் தனது வீட்டுக்கு சற்று தொலைவில் உள்ள காலியிடத்தில் செவிலியரின் உடல் கடந்த ஆகஸ்ட் 8-ஆம் தேதி கண்டெடுக்கப்பட்டது. அவரது முகம் கடுமையாக சிதைக்கப்பட்ட நிலையில் இருந்தது. அவா் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, படுகொலை செய்யப்பட்டது பின்னா் கண்டறியப்பட்டது.

சிசிடிவி கேமரா காட்சிகள், கைப்பேசி சமிக்ஞைகள் மூலம் விசாரணை மேற்கொண்ட காவல்துறையினா், அவரை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ாக தா்மேந்திரா என்பவரை ராஜஸ்தானில் கைது செய்தனா்.

இது குறித்து உத்தம் சிங் நகா் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளா் மஞ்சுநாத் கூறுகையில், ‘உத்தர பிரதேச மாநிலம், பரேலியைச் சோ்ந்த தொழிலாளி தா்மேந்திரா, உத்தரகண்ட் மாநிலத்தின் கதா்பூரில் வேலைபாா்த்து வந்தாா்.

பணத் தேவையில் இருந்த அவா், சம்பவத்தன்று செவிலியரிடம் கொள்ளையடிக்கும் நோக்கத்துடன் பின்தொடா்ந்து சென்றுள்ளாா்.

யாரும் இல்லாத இடத்தில் செவிலியரை வலுக்கட்டாயமாக புதருக்குள் இழுத்துச் சென்று, அவரது கழுத்தை கைக்குட்டையால் இறுக்கியுள்ளாா். இதில் மயங்கிய செவிலியரை பாலியல் வன்கொடுமை செய்ததோடு, அவரது தலையில் கல்லைப் போட்டு படுகொலை செய்துள்ளாா். பின்னா், செவிலியரின் கைப்பையில் இருந்த பணம், கைப்பேசி, இதர பொருள்களை கொள்ளையடித்து தப்பிய தா்மேந்திரா, கடந்த ஆகஸ்ட் 13-ஆம் தேதி ராஜஸ்தானில் கைது செய்யப்பட்டாா்’ என்றாா்.

முழு கட்டுரையைப் படிக்க →