மணீஷ் சிசோடியா வழிபாடு 
இந்தியா

தில்லி கல்காஜி கோயிலில் மணீஷ் சிசோடியா வழிபாடு!

முதல்வர் அரவிந்த் கேஜரிவால் விரைவில் விடுதலை ஆவார் என நம்பிக்கை தெரிவித்தார்.

பிடிஐ

தில்லி கலால் கொள்கை வழக்கில் உச்ச நீதிமன்றத்தால் கடந்த வாரம் ஜாமீனில் வந்ததையடுத்து, முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடிய கல்காஜி கோயிலில் வழிபாடு செய்தார்.

கோயிலில் வழிபாடு செய்தபின்னர் அவர் பேசியதாவது,

சிறையிலிருந்து வெளியே வந்ததும், கல்காஜி கோயிலில் பிரார்த்தனை செய்ய வந்ததாகவும், தில்லி பொதுமக்களின் பிரார்த்தனைகளைக் கேட்டதற்காகக் கடவுளுக்கு நன்றி தெரிவித்தேன்.

தில்லி கலால் கொள்கை வழக்கில் கைது செய்யப்பட்ட தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் விரைவில் விடுதலை ஆவார் என நம்பிக்கை தெரிவித்தார்.

முன்னதாக வெள்ளிக்கிழமை, சிசோடியா பஞ்சாப் முதல்வர் பகவந்த் மானை சந்தித்து கட்சி விவகாரங்கள் குறித்து விவாதித்தார்.

மேலும், முதல்வர் அரவிந்த் கேஜரிவாலுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்த சிசோடியா, “நாட்டில் நிலவும் சர்வாதிகாரத்துக்கு எதிராக தில்லி முதல்வர் மிகக் கடுமையான போரில் ஈடுபட்டு வருகிறார்” என்று கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிறுமி வன்கொடுமை வழக்கு: ஆசாராம் பாபு இடைக்கால ஜாமீன் மீண்டும் நீட்டிப்பு!

ராகுல் குற்றச்சாட்டுகள் முற்றிலும் தவறானவை - தேர்தல் ஆணையம்

மியான்மர் அதிபர் காலமானார்!

பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான மே.இ.தீவுகள் அணி அறிவிப்பு!

ஆற அமர... சாரா யஸ்மின்!

SCROLL FOR NEXT