மினி லாரி மீது பேருந்து மோதியதில் 10 பேர் பலி!
உத்தரப் பிரதேசத்தில் உள்ளூர் மக்கள் சாலை மறியல்
உத்தரப் பிரதேசத்தில் மினி லாரி மீது பேருந்து மோதியதில் 10 பேர் பலியாகினர்.
உத்தரப் பிரதேசத்தின் புலந்த்ஷாரில் உள்ள சேலம்பூரில், ஞாயிற்றுக்கிழமை, மினி லாரி மீது பேருந்து மோதியது. இந்த விபத்தில், மினி லாரியில் பயணம் செய்த 25 பேரில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும், காயமடைந்தவர்களை, உள்ளூர் மக்களின் உதவியுடன் அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
Advertisement
இந்த விபத்தில், மினி லாரி முற்றிலும் நொறுங்கிய நிலையில், பேருந்தின் முன் பகுதியும் சேதமடைந்தது. எவ்வாறு விபத்து நடந்தது? என்பது இன்னும் கண்டறியப்படவில்லை.
இதனைத் தொடர்ந்து, விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு நீதி வேண்டி, அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், விசாரணை மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்துள்ளனர்.