அஸ்ஸாமில் மினி பேருந்து - லாரி மோதிக்கொண்டதில் பிரபல பிஹு நடனக் கலைஞர் பலி, 11 பேர் காயம்
அஸ்ஸாமில் மினி பேருந்து - லாரி மோதிக்கொண்ட விபத்தில் பிரபல பிஹு நடனக் கலைஞர் பலியான நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அஸ்ஸாமில் மினி பேருந்து - லாரி மோதிக்கொண்ட விபத்தில் பிரபல பிஹு நடனக் கலைஞர் பலியான நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அஸ்ஸாமின் தமுல்பூர் மாவட்டத்தில் மினி பேருந்தும் லாரியும் வெள்ளிக்கிழமை இரவு நேருக்கு நேர் மோதிக்கொண்ட சம்பவத்தில் பிரபல பிஹு நடனக் கலைஞர் நிஷாமோனி ஹலோய்(25) பலியானார். மேலும் இந்த விபத்தில் அவரது குழுவைச் சேர்ந்த 11 பேர் காயமடைந்தனர் என்று போலீஸார் சனிக்கிழமை தெரிவித்தனர்.
விபத்தில் பலியான நிஷாமோனி அருகிலுள்ள பகுதியில் பிஹு நடன நிகழ்ச்சிக்காக தனது குழுவுடன் பயணம் செய்து கொண்டிருந்தார். பெண் நடனக் கலைஞர்கள், ஆண் மேளக்காரர்கள் மற்றும் பிற கலைஞர்கள் உட்பட சுமார் 30 பேர் அந்த வாகனத்தில் இருந்தனர். குழுவில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த உறுப்பினர்களும் இருந்தனர்.
Advertisement
Advertisement
பலத்த காயமடைந்தவர்கள் கௌஹாட்டி மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளனர். மற்றவர்கள உள்ளூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். உடற்கூராய்வுக்குப் பிறகு நிஷாமோனி உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படும் என்று போலீஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்துக்கான காரணத்தைக் கண்டறிய நாங்கள் முயன்று வருகிறோம் என்றும் அவர்கள் மேலும் கூறினர். நிஷாமோனி பிரபல பிஹு நடனக் கலைஞர் மட்டுமின்றி பாரம்பரிய நகாரா நாம் கலைஞரும் என்பதால் அவரின் மரணம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே பிரபல பிஹு நடனக் கலைஞர் மறைவுக்கு முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா இரங்கல் தெரிவித்துள்ளார்.
A popular Bihu dancer was killed and 11 members of her troupe were injured in a head-on collision between a mini bus and a trailer truck in Assam's Tamulpur district, police said on Saturday.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.