FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

தெலங்கானாவில் கோர விபத்து: லாரி மீது பேருந்து மோதியதில் 6 பேர் பலி

தெலங்கானாவின் சூர்யாபேட்டை மாவட்டத்தில் புதன்கிழமை காலை தனியார் பேருந்து விபத்தில் 5 பெண்கள் உள்பட 6 பேர் பலியானது குறித்து..

தெலங்கானா மாநிலம் சூர்யாபேட்டை மாவட்டம் ஹைதராபாத்-விஜயவாடா தேசிய நெடுஞ்சாலையில், டோராகுண்டா கிராமத்திற்கு அருகே, கனரகத் தொழில் துறைத் தூண்களை ஏற்றிச் சென்ற லாரியின் பின்புறம் மோதி விபத்துக்குள்ளானதில் உருகுலைந்து காணப்படும் தனியார் மின்சாரப் பேருந்து. - பிடிஐ
பகிர்:

ஹைதராபாத்: தெலங்கானாவின் சூர்யாபேட்டை மாவட்டத்தில் புதன்கிழமை காலை தனியார் பேருந்து ஒன்று லாரி மீது மோதியதில், 5 பெண்கள் உள்பட 6 பேர் பலியாகினர்; 12 பேர் காயமடைந்தனர்.

இதுகுறித்து கோடாட் மூத்த காவல் அதிகாரி ஒருவர் தெரிவித்ததாவது:

தெலங்கானா மாநிலத் தலைநகர் ஹைதராபாத்தில் இருந்து ஆந்திரப் பிரதேசத்தின் ஏலூரு நகருக்கு 42 பயணிகளுடன் சென்றுகொண்டிருந்த தனியார் மின்சாரப் பேருந்து, புதன்கிழமை அதிகாலை சுமார் 4.30 மணியளவில் ஹைதராபாத்-விஜயவாடா தேசிய நெடுஞ்சாலையில், கோடாட் மண்டல் அருகே கனரகத் தொழில் துறைத் தூண்களை ஏற்றிச் சென்ற லாரியின் பின்புறத்தில் மோதி விபத்துக்குள்ளானது.

Advertisement

Advertisement

இதில், பேருந்தில் பயணித்த 5 பெண்கள் உள்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்; 12 பேர் காயமடைந்தனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சடலங்களை மீட்டு உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், பேருந்து லாரி மீது மோதுவதற்கு முன்பாகவே அந்த லாரி சாலைத் தடுப்புச் சுவரில் மோதியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுவதாகவும், விபத்து தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

ரேவந்த் ரெட்டி இரங்கல்

இதற்கிடையில், சாலை விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு தெலங்கானா முதல்வர் ஏ. ரேவந்த் ரெட்டி இரங்கல் தெரிவித்துள்ளார்.

காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். காயமடைந்தவர்களுக்கு உயர்தர மருத்துவச் சிகிச்சை அளிக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு தலைமைச் செயலாளருக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.

summary

Six persons including five women died and at least 12 others were injured when a private bus they were travelling in hit a truck in Suryapet district of Telangana...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments