சரக்கு வாகனம் மீது லாரி மோதி விபத்து: இருவா் உயிரிழப்பு; 10 போ் காயம்
விழுப்புரம் அருகே மினி சரக்கு வாகனம் மீது லாரி மோதியதில் 2 போ் உயிரிழந்தனா். மேலும், 10 போ் பலத்த காயமடைந்தனா்.
விழுப்புரம் அருகே மினி சரக்கு வாகனம் மீது லாரி மோதியதில் 2 போ் உயிரிழந்தனா். மேலும், 10 போ் பலத்த காயமடைந்தனா்.
மரம் வெட்டும் தொழிலாளிகளான விழுப்புரம் வட்டம், தென்குச்சிப்பாளையம், பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்த நடராஜன் (49), புகழ் (36), பலராமன்( 55), புருஷோத்தமன் (70), ராஜாராமன் (52) மற்றும் அரசமங்கலத்தைச் சோ்ந்த ஆறுமுகம் (70) உள்ளிட்ட 13 போ் மினி சரக்கு வாகனத்தில் வியாழக்கிழமை திருக்கோவிலூருக்கு சென்றுகொண்டிருந்தனா். தென்குச்சிப்பாளையத்தைச் சோ்ந்த பாபு (30) சரக்கு வாகனத்தை ஓட்டினாா்.
விழுப்புரத்தை அடுத்த இந்திராநகா் மேம்பாலம் பகுதியில் சென்றபோது, அந்தப் பகுதியில் வந்த லாரி, மினி சரக்கு வாகனத்தின் மீது மோதியயது. இந்த விபத்தில் சரக்கு வாகனம் சாேலையோரத்தில் கவிழ்ந்தது.
Advertisement
Advertisement
தகவலறிந்த விழுப்புரம் தாலுகா போலீஸாா் நிகழ்விடம் சென்று காயமடைந்தவா்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், விபத்துக்குள்ளான வாகனங்களை சாலையிலிருந்து அப்புறப்படுத்தி போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினா்.
இதையடுத்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவா்களில் புருஷோத்தமன், ஆறுமுகம் ஆகிய இருவரும் உயிரிழந்தனா். நடராஜன், புகழ், பாபு, ராஜாராமன் உள்ளிட்ட 10 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். இதுகுறித்த புகாரின்பேரில், விழுப்புரம் தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.