கொல்கத்தா கொடூரம் Center-Center-Delhi
இந்தியா

கொல்கத்தா பெண் மருத்துவர் உடலில் 14 இடங்களில் காயங்கள்.. உடல் கூறாய்வு அறிக்கை!

கொல்கத்தா பெண் மருத்துவர் உடலில் 14 இடங்களில் காயங்கள் இருந்ததாக உடல் கூறாய்வு அறிக்கை தெரிவித்துள்ளது.

DIN

கொல்கத்தா: கொல்கத்தாவில் உள்ள ஆர்ஜி கர் மருத்துவமனையில் கொலை செய்யப்பட்ட பெண் மருத்துவர் உடலில் 14 இடங்களில் காயங்கள் இருந்ததாக உடல் கூறாய்வு தெரிவிக்கிறது.

பெண் மருத்துவரின் தலை, முகம், கழுத்து, கைகள், பெண்ணுறுப்பு என 14 இடங்களில் காயங்கள் ஏற்படுத்தப்பட்டிருந்ததாகவும், மிகக் கொடூரமான முறையில் தாக்குதலுக்கு உள்ளாகி கொல்லப்பட்டுள்ளார் என்றும் கூறப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆர்ஜிகர் மருத்துவமனையில், இரவுப் பணியில் இருந்த பெண் முதுநிலை மாணவி, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில், பெண்ணின் உடல் கூறாய்வு முடிவுகள் ஆங்கில நாளிதழ் ஒன்றில் வெளியாகியிருக்கிறது.

அதில், கழுத்து நெறிக்கப்பட்டு, மூச்சு திணறல் ஏற்பட்டு, பெண்ணின் மரணம் நிகழ்ந்துள்ளதாகக் கூறப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பெண்ணின் உடலில் இருக்கும் காயங்கள், அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருப்பதை உறுதி செய்வதாகவும், பெண்ணுறுப்பில் இருக்கும் திரவங்கள் பாலியல் பலாத்காரத்தை உறுதிப்படுத்துவதாகவும் கூறப்பட்டுள்ளது.

மேலும், கொல்லப்பட்ட பெண்ணுக்கும், கொலையாளிக்கும் இடையே கடுமையான போராட்டம் நடந்திருப்பதை காயங்கள் மூலம் அறிய முடிகிறது என்றும், பெண்ணின் மூக்கு, வலது தாடை, இடது கை, தோள்பட்டை போன்றவற்றில் ஏற்பட்டிருக்கும் காயங்கள், பெண் கொல்லப்படுவதற்கு முன்பு கடுமையான போராட்டத்தை சந்தித்திருக்கிறார் என்பதை காட்டுகிறது.

உடலில் கடுமையான பாதிப்பு ஏற்படுத்தப்பட்டிருப்பதையும், அவரது நுரையீரலில் உறைந்த ரத்தம் இருப்பதும், அவர் கடுமையாக துன்புறுத்தப்பட்டிருப்பதை சொல்வதாகவும் உடல் கூறாய்வில் கூறப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கலை, கலாசாரம் அறிய தமிழகம் வந்த 99 அயலகத் தமிழா்கள் முதல்வா் மு.க.ஸ்டாலினுடன் சந்திப்பு

தொழில்நுட்பக் கோளாறு: ஓடுபாதையில் நிறுத்தப்பட்ட விமானம்

பி.ஆா்க். சோ்க்கை: 820 மாணவா்களுக்கு ஒதுக்கீடு

கஞ்சா வைத்திருந்த முதியவா் கைது

இன்றைய நிகழ்ச்சிகள் திருப்பத்தூா்

SCROLL FOR NEXT