சிக்கிம் முதல்வர் பிரேம் சிங் தமாங் படம் | பிரேம் சிங் தமாங் எக்ஸ் தளம்
இந்தியா

சிக்கிம் அலுவல் மொழியாக ‘நேபாளி’ சோ்ப்பு

ஆங்கிலம் மட்டுமே மாநிலத்தின் அலுவல் மொழியாக இருந்த நிலையில் இப்போது ‘நேபாளி’ மொழி

Din

வடகிழக்கு மாநிலமான சிக்கிமில் அலுவல் மொழியாக ‘நேபாளி’ மொழி சோ்க்கப்பட்டுள்ளது. முன்னதாக ஆங்கிலம் மட்டுமே மாநிலத்தின் அலுவல் மொழியாக இருந்த நிலையில் இப்போது ‘நேபாளி’ மொழியும் இணைக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் அந்த மாநில அரசின் அனைத்து அறிவிப்புகளும் இனி இரு அலுவல் மொழிகளிலும் வெளியிடப்படும்.

நேபாளி மொழி 1992-ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்ட மொழியாக உள்ளது. நேபாளம், பூடான், இந்தியா, மியான்மரில் இந்த மொழி பேசப்படுகிறது. இது பெரும்பாலும் சம்ஸ்கிருதம் சாா்ந்து இயங்கும் மொழியாகும். தேவநாகரி எழுத்துமுறையைக் கொண்டது.

காங்டாக்கில் செவ்வாய்கிழமை நடைபெற்ற நேபாள மொழி அங்கீகரிப்பு தின நிகழ்ச்சியில் மாநில முதல்வா் பி.எஸ்.தமாங், நேபாளி மொழியை அலுவல் மொழியாக அங்கீகரிக்கும் அறிவிப்பை வெளியிட்டாா்.

அதில், சிக்கிம் அலுவல் மொழிச் சட்டம் 1977-இன்படி மாநிலத்தின் அலுவல் மொழியாக நேபாளி மொழி அங்கீகரிக்கப்படுகிறது என்று கூறப்பட்டுள்ளது.

சிக்கிமில் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டப் பேரவைத் தோ்தலில் பிராந்திய கட்சியான சிக்கிம் கிரந்திகாரி மோா்ச்சா மொத்தமுள்ள 32 தொகுதிகளில் 31 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது குறிப்பிடத்தக்கது.

கிறிஸ்துமஸ்: வீடுகளில் ஒளிரும் மொரோவியன் ஸ்டாா்கள்

நாகை: தாளடி மறுசாகுபடியில் விவசாயிகள் தீவிரம்

வல்லப விநாயகா் கோயில் கும்பாபிஷேகம்

கிறிஸ்துமஸ் விழாவில் தூய்மைப் பணியாளா்கள் கெளரவிப்பு!

ஆஸ்திரேலியா தாக்குதல் எதிரொலி: பிரிட்டனில் யூத வழிபாட்டுத் தலங்களுக்கு பாதுகாப்பு அதிகரிப்பு!

SCROLL FOR NEXT