கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை விவகாரத்தில் மாணவர்கள் சங்கம் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொல்கத்தாவில் கூடுதல் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி. கர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், முதுநிலை பெண் பயிற்சி மருத்துவர்(31) பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டு, கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவத்தில் மருத்துவமனையில் தன்னார்வலராக பணியாற்றி வந்த சஞ்சய் ராய் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொல்கத்தா உயர்நீதிமன்ற உத்தரவையடுத்து, தற்போது வழக்கினை சிபிஐ விசாரித்து வருகிறது.
மேலும் கொல்கத்தா மட்டுமின்றி நாடு முழுவதுமே போராட்டம் தொடர்ந்து வருகிறது.
இந்த நிலையில் மேற்குவங்க மாணவர்கள் சங்கம் மாபெரும் பேரணியில் ஈடுபட்டுள்ளது.
இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மொத்தம் 4,100 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர் பேரணி நாளை(செவ்வாய்க்கிழமை) நபன்னா பகுதியை அடைவதால், அங்கு மட்டும் 2,100 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மேற்குவங்கத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் அரசு ஆட்சியில் உள்ள நிலையில் பாஜகவும் இந்த விவகாரத்தை கையில் எடுத்துள்ளது.
இந்நிலையில் பாஜக மகளிரணி, ஆக. 28 முதல் பல போராட்டங்களை நடத்த உள்ளதாக அறிவித்துள்ளது.
இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொல்கத்தாவில் மொத்தம் 4,100 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளை(செவ்வாய்க்கிழமை) நபண்ணா பகுதியில் போராட்டம் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.