பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய தலைவராக மீண்டும் மாயாவதி செவ்வாய்க்கிழமை தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலம் லக்னெளவில் நடைபெற்ற பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கட்சியின் நிர்வாகிகள், அனைத்து மாநிலங்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில், கட்சியின் தேசிய தலைவராக மீண்டும் மாயாவதி ஒருமனதாக தேர்வு செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
உத்தரப் பிரதேசத்தின் முதல்வராக நான்கு முறை பதவி வகித்துள்ளார் மாயாவதி. பகுஜன் சமாஜ் கட்சியின் நிறுவனரான கன்சி ராமால் இருவது ஆண்டுகளுக்கு முன்பே அரசியல் வாரியாக அறிவிக்கப்பட்டவர்.
கடந்த 2003ஆம் ஆண்டு முதல் பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய தலைவராக மாயாவதி பதவி வகித்து வருவது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.