தேடுதல் வேட்டையில் ராணுவம் 
இந்தியா

பாகிஸ்தான்: 10 நாள்களில் 37 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை!

அமைதி திரும்பும் வரை தொடர்ந்து பயங்கரவாதிகள் அழிக்கப்படுவார்கள் ..

IANS

பாகிஸ்தானின் வடமேற்கு கைபர் பக்துன்க்வா மாவடத்தில் நடந்துவரும் ராணுவ நடவடிக்கையில் கடந்த 10 நாள்களில் 37 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகவும் 14 பேர் காயமடைந்துள்ளதாகவும் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.

பாகிஸ்தான் ராணுவத்தின் ஊடகப் பிரிவான இன்டர்-சர்வீஸ் பப்ளிக் ரிலேஷன்ஸ்(ஐஎஸ்பிஆர்) வெளியிட்ட அறிக்கையில்,

கைபரின் தீரா பகுதியில் ஆகஸ்ட் 20 முதல் பாதுகாப்புப் படைகள் விரிவான உளவுத்துறை அடிப்படையிலான நடவடிக்கைகளை நடத்தி வருவதாகக் கூறியது.

கடந்த இரண்டு நாள்களில் நடத்தப்பட்ட சமீபத்திய நடவடிக்கைகளின் விவரங்களில், பயங்கரவாதிகளின் இருப்பிடங்களைக் கண்டறிந்து 12 பயங்கரவாதிகளைக் கொன்றதாகத் தெரிவித்தனர். மொத்தம் இதுவரை 37 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர்.

தற்போது நடைபெற்று வரும் நடவடிக்கைகள் "பயங்கரவாத குழுக்கள் மற்றும் அவற்றின் துணை அமைப்புகளுக்கு பெரும் பின்னடைவை" ஏற்படுத்தியுள்ளதாக ராணுவம் தெரிவித்துள்ளது.

ஐஎஸ்பிஆர்யின் கூற்றுப்படி, இப்பகுதியில் அமைதி திரும்பும் வரை தொடர்ந்து பயங்கரவாதிகள் கண்டுபிடித்து அழிக்கப்படுவார்கள் என்று பாதுகாப்புப்படை அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வாழ்வில் முன்னேற கடின உழைப்பு தேவை: இந்திய விமானப்படை அதிகாரி

ராணிப்பேட்டை குறைதீா் கூட்டத்தில் 351 மனுக்கள் அளிப்பு

தலைநகரில் இடியுடன் கூடிய பலத்த மழை; ‘மஞ்சள்’ எச்சரிக்கை வெளியீடு!

குடியாத்தம் நகர கழிவுநீா் சுத்திகரிப்புக்கு ரூ.33 கோடி நிதி ஒதுக்கீடு

ஆட்டோவில் வைத்திருந்த பணத்தை திருடியவா் கைது

SCROLL FOR NEXT