கோப்புப்படம். 
இந்தியா

சத்தீஸ்கரில் யானை தாக்கியதில் 5 கால்நடைகள் உயிரிழப்பு

சத்தீஸ்கரில் யானை தாக்கியதில் ஒரு கன்று உட்பட 5 கால்நடைகள் உயிரிழந்தன.

DIN

சத்தீஸ்கரில் யானை தாக்கியதில் ஒரு கன்று உட்பட 5 கால்நடைகள் உயிரிழந்தன.

சத்தீஸ்கரின் கோர்பா மாவட்டத்தில் உள்ள சிரி கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு காட்டு யானை ஒன்று நுழைந்தது. பின்னர் அங்கிருந்த வீடு ஒன்றின் மாட்டுத் தொழுவத்தில் நுழைந்த அந்த யானை நான்கு பசுக்களையும் ஒரு கன்றுவையும் தாக்கியுள்ளது.

இந்த சம்பவத்தில் 5 கால்நடைகளும் உயிரிழந்தன. தொடர்ந்து அப்பகுதியில் உள்ள வீட்டை சேதப்படுத்தியதோடு விவசாய வயல்களில் புகுந்து பயிர்களையும் நாசம் செய்துள்ளது. இதையடுத்து அந்த யானை வனப் பகுதிக்கு சென்றது என்று வன அதிகாரி குமார் நிஷாந்த் தெரிவித்தார்.

புஷ்பா - 2 டிக்கெட் முன்பதிவிலேயே இத்தனை கோடிகளா?

இருப்பினும் யானை தொடர்ந்தும் அப்பகுதியில் நடமாடுவதால் மக்கள் விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதனிடையே யானை தாக்குதலால் நஷ்டம் அடைந்த விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படும் என அதிகாரி மேலும் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

102 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸி.யை வீழ்த்தி இந்தியா அபாரம்; சமனில் ஒருநாள் தொடர்!

அமித் ஷா-வை சந்திக்கக் காரணம்…: EPS விளக்கம்! | செய்திகள்: சில வரிகளில் | 17.09.25

ஜெர்மனியில் செந்தேன்... சிவாங்கி!

நட்புக்குள்ளே.... சத்யா தேவராஜன்!

பிரதமர் மோடிக்கு பிரிட்டன் மன்னர் அளித்த பிறந்தநாள் பரிசு! என்ன தெரியுமா?

SCROLL FOR NEXT