இந்திய ரூபாய் மதிப்பு விவரம் PTI
இந்தியா

கடும் சரிவிலிருந்து 3 காசுகள் உயர்ந்த ரூபாய் மதிப்பு!

டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு ரூ. 84.72 காசுகளாக நிர்ணயம்.

DIN

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு கடும் சரிவிலிருந்து 3 காசுகள் உயர்ந்து ரூ. 84.72 காசுகளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்திய ரூபாய் மதிப்பு இதுவரை இல்லாத வகையில் நேற்று 8 காசுகள் சரிந்து ரூ. 84.75 ஆக வணிகமானது.

உள்ளூர் வணிகம் மற்றும் பங்குகளை வாங்கும் வெளிநாட்டு முதலீட்டாளர்களின் ஆர்வம் உள்ளிட்டவை காரணமாக டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு சற்று உயர்ந்துள்ளதாக நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.

வணிக நேரத் தொடக்கத்தில் வங்கிகளுக்கு இடையிலான நாணய பரிமாற்றத்தில் இந்திய ரூபாய் மதிப்பு 84.72 காசுகளுடன் தொடங்கியது. பின்னர் 2 காசுகள் உயர்ந்து 84.70 காசுகளாக வணிகமானது. வணிகத்தில் நிலவிய ஏற்ற இறக்கத்தால் ரூ. 84.74 காசுகள் வரை சரிந்தது.

பங்குச் சந்தை வணிகம்

மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 809.53 புள்ளிகள் உயர்ந்து 81,765.86 புள்ளிகளாக வணிகம் நிறைவு பெற்றது. மொத்த வணிகத்தில் இது 1 சதவீதம் உயர்வாகும்.

தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 240.95 புள்ளிகள் உயர்ந்து 24,708.40 புள்ளிகளாக நிறைவு பெற்றது. இது மொத்த வணிகத்தில் 0.98 சதவீதம் உயர்வாகும்.

வணிக நேர முடிவில் சென்செக்ஸ் 809 புள்ளிகளும் நிஃப்டி 240 புள்ளிகளும் உயர்வுடன் இருந்தன. மும்பை பங்குச் சந்தையில் ரூ. 459.16 கோடிக்கு வணிகம் நடைபெற்றது. அதிகபட்சமாக ஐடி துறை பங்குகள் 1.95% உயர்ந்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மருதம் எல்லையம்மன் கோயில் தோ்த் திருவிழா

முனைவா் வசந்திதேவி மறைவுக்கு அஞ்சலி

தஞ்சையில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டம் தொடக்கம்

வாலாஜாபாத்தில் 195 ஆண்டுகள் பழைமையான கல்வெட்டு கண்டுபிடிப்பு

ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சுற்றுலா பேருந்து விபத்து: 6 போ் காயம்

SCROLL FOR NEXT