ஜார்க்கண்ட்டில் அமைச்சரவை துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
ஜார்க்கண்டின் 14-வது முதல்வராக ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் தலைவர் ஹேமந்த் சோரன் நவ.28 ஆம் தேதி பதவியேற்றுக் கொண்டார். ராஞ்சியில் மொராபாடி மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சோரனுக்கு ஆளுநர் சந்தோஷ் குமார் கங்வார் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். 49 வயதாகும் ஹேமந்த் சோரன் நான்காவது முறையாக முதல்வராக பதவியேற்றுள்ளார்.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஆளும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா(ஜேஎம்எம்) - காங்கிரஸ் கூட்டணி பாஜக தலைமையிலான கூட்டணியை வீழ்த்தி, மூன்றாவது முறையாக ஆட்சியைப் பிடித்து சாதனை படைத்தது. இதனால், கூட்டணிக் கட்சியினருக்கும் அமைச்சரவையில் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.
ஒதுக்கப்பட்டுள்ள துறைகள்
முதல்வர் ஹேமந்த் சோரன்: உள்துறை, நிர்வாக சீர்திருத்தங்கள், அதிகாரபூர்வ மொழி, சாலை மறுசீரமைப்பு, கட்டுமானம்.
ராதாகிருஷ்ணன் கிஷோர்(காங்கிரஸ்): நிதி, வணிக வரி, திட்டமிடல் மற்றும் மேம்பாடு, நாடாளுமன்ற விவகாரங்கள்.
தீபக் பிருவா(ஜேஎம்எம்): வருவாய், பத்திரப்பதிவு மற்றும் நில சீர்திருத்தங்கள், போக்குவரத்து.
சாம்ரா லிண்டா (ஜேஎம்எம்): பழங்குடியினர், பட்டியல் சாதியினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (சிறுபான்மை நலன் அல்லாமல்).
சஞ்சய் பிரசாத் யாதவ் (ராஷ்டிரிய ஜனதா தளம்): தொழில்கள், தொழிலாளர், திட்டமிடல், பயிற்சி மற்றும் திறன் மேம்பாடு.
இர்பான் அன்சாரி (காங்கிரஸ்): சுகாதாரம், மருத்துவக் கல்வி மற்றும் குடும்ப நலன், உணவு, பொது விநியோகம் மற்றும் நுகர்வோர் நலன், பேரிடர் மேலாண்மை.
ராம்தாஸ் சோரன் (ஜேஎம்எம்): பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவு, பத்திரப்பதிவு.
ஹபிசுல் ஹசன் (ஜேஎம்எம்): நீர்வளம், சிறுபான்மையினர் நலன்.
தீபிகா பாண்டே சிங் (காங்கிரஸ்): பஞ்சாயத்து ராஜ், ஊரகப்பணிகள் மற்றும் ஊரக வளர்ச்சி.
யோகேந்திர பிரசாத் (ஜேஎம்எம்): குடிநீர் மற்றும் சுகாதாரம்.
சுதிவ்ய குமார் (ஜேஎம்எம்): நகர்ப்புற மேம்பாடு மற்றும் வீட்டுவசதி, உயர் மற்றும் தொழில்நுட்பக் கல்வி, சுற்றுலா, கலை, கலாசாரம், விளையாட்டு மற்றும் இளைஞர் நலன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.