மகாராஷ்டிர அமைச்சரவை விரிவாக்கம் எப்போது? வெளியானத் தகவல்
மகாராஷ்டிர அமைச்சரவை எப்போது விரிவாக்கம் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
மகாராஷ்டிர அமைச்சரவை எப்போது விரிவாக்கம் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
மகாராஷ்டிர முதல்வராக 3வது முறையாக பாஜகவின் தேவேந்திர ஃபட்னவீஸ் வியாழக்கிழமை பதவியேற்றார். துணை முதல்வர்களாக தேசியவாத காங்கிரஸ் தலைவர் அஜீத் பவாரும், சிவசேனை கட்சித் தலைவர் ஏக்நாத் ஷிண்டேவும் இன்று (டிச. 5) பொறுப்பேற்றுக்கொண்டனர்.
மகாராஷ்டிர பேரவைத் தோ்தல் முடிவு நவ. 23-ஆம் தேதி வெளியானது. இதில் பாஜக-சிவசேனை- தேசியவாத காங்கிரஸ் கூட்டணி மொத்தமுள்ள 288 தொகுதிகளில் 230 இடங்களில் வெற்றி பெற்றது. இக்கூட்டணியில் 132 இடங்களுடன் பாஜக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது.
கெட்டுப்போன குளுக்கோஸ் பாக்கெட்டுகள்? மெக்சிகோவில் 13 குழந்தைகள் பலி
ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனை 57 இடங்களையும், அஜீத் பவாா் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் 41 இடங்களையும் கைப்பற்றின. இந்த நிலையில் தேவேந்திர ஃபட்னவீஸ் தலைமையிலான மகாராஷ்டிர அரசின் அமைச்சரவை விரிவாக்கம் டிசம்பர் 11 அல்லது 12 ஆம் தேதி நடைபெறும் என்று வெள்ளிக்கிழமை வட்டாரங்கள் தெரிவித்தன.
அதில், அஜீத் பவாா் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் நிதித்துறையும், பாஜக உள் துறையையும் தக்க வைத்துக் கொள்ளும் என்று தகவல்கள் தெரிய வந்துள்ளன. அதேசமயம் ஷிண்டே தலைமையிலான சிவசேனை நகர்ப்புற வளர்ச்சித் துறையை தக்க வைப்பதோடு வருவாய்த் துறையுயும் கேட்டுப் பெறலாம் எனக் கூறப்படுகிறது.
மகாராஷ்டிர அமைச்சரவையில் முதல்வர் உட்பட அதிகபட்சமாக 43 அமைச்சர்கள் இருக்க முடியும். மகாயுதி கூட்டணியின் மிகப்பெரிய அங்கமான பாஜகவுக்கு அமைச்சரவையில் 21-22 இடங்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சிவசேனைக்கு 11 முதல் 12 அமைச்சர் பதவிகளும், என்.சி.பி.க்கு 9 முதல் 10 அமைச்சர் பதவிகளும் கிடைக்கலாம் என தெரிவிக்கின்றன.