நாடாளுமன்றத்தில் அதானியின் பெயரைக் கேட்க பாஜக விரும்பவில்லை: காங்கிரஸ்
நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரின் 12 ஆம் நாளான இன்று நடைபெற்ற அமளியால் இரு அவைகளும் ஒத்திவைப்பு.
இந்தியாநாடாளுமன்றத்தில் அதானியின் பெயரைக் கேட்க பாஜக விரும்பவில்லை: காங்கிரஸ்
நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரின் 12 ஆம் நாளான இன்று நடைபெற்ற அமளியால் இரு அவைகளும் ஒத்திவைப்பு.
நாடாளுமன்றத்தை நடத்த மத்திய பாஜக அரசு விரும்பாததால் அவர்கள் ஒத்திவைக்கின்றனர் என காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரின் 12 ஆம் நாளான இன்று நடைபெற்ற அமளியால் இரு அவைகளும் மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டன.
இதனைத் தொடர்ந்து பத்திரிகையாளர்களுடன் பேசிய காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால், “அவைகள் ஒத்திவைக்கப்பட்டது மத்திய அரசால் தான். அவர்களுக்கு அவையை நடத்த விருப்பமில்லை. அதனாலேயே, நாங்கள் பிரச்னை குறித்து குரல் எழுப்பியவுடன் 10 நொடிகளில் ஒத்திவைப்பதாக அறிவித்தனர். நாடாளுமன்றத்தில் அதானியின் பெயரைக் கேட்க அவர்கள் விரும்பவில்லை” என்றார்.
இதையும் படிக்க | இந்தியாவைக் கண்டு உலக நாடுகள் வியப்பு!
மேலும், “இன்று மக்களவை தொடங்குவதற்கு முன்னர் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் ஒரு மோசமான கருத்தை வெளியிட்டார். இது புதிதாக இருக்கிறது. நாடாளுமன்ற விவகாரத் துறை அமைசரின் வேலை அவைய சுமூகமாக நடத்துவதும், இரு தரப்பினருடனும் கலந்துரையாடுவதும் தான். ஆனால், இவ்வாறு மோசமான அறிக்கை வெள்யிடுவது அவர்கள் அவை நடத்த விரும்பவில்லை என்பதையே காட்டுகிறது.
இது தொடர்பாக பேசிய கார்த்தி சிதம்பரம் எம்பி, “மத்திய அரசு மக்களவையை நடத்துவதற்கு முட்டுக்கட்டைப் போடும் வழிகளை மட்டுமே யோசிக்கிறது. அனைவருக்கும் பேசுவதற்கான வாய்ப்பு வழங்கபடவேண்டும். பிரச்னைகளைப் பற்றி பேசுவதற்கு எதிர் கட்சியினருக்குத் தொடர்ந்து வாய்ப்புத் தரப்படாமல் இருப்பது நாடாளுமன்ற ஜனநாயகத்துக்கு எதிரானது” என்று பேசினார்.