சர்வான் சிங் பாந்தர் PTI
இந்தியா

டிச. 14ல் தில்லி நோக்கி மீண்டும் பேரணி!

டிச. 14ஆம் தேதி தில்லி நோக்கி மீண்டும் பேரணியில் ஈடுபடவுள்ளதாக பஞ்சாப் விவசாய சங்கத் தலைவர் அறிவிப்பு.

DIN

டிச. 14ஆம் தேதி தில்லி நோக்கி மீண்டும் பேரணியில் ஈடுபடவுள்ளதாக பஞ்சாப் விவசாய சங்கத் தலைவர் சர்வான் சிங் பாந்தர் தெரிவித்துள்ளார்.

கடந்த 8ஆம் தேதி காவல் துறையினர் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசியதில் 9 விவசாயிகள் படுகாயம் அடைந்ததால், தில்லி நோக்கிச்சென்ற பேரணி தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்தது.

வேளாண் பயிா்களுக்கு வழங்கப்படும் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு (எம்எஸ்பி) சட்ட உத்தரவாதம், விவசாயக் கடன் தள்ளுபடி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த பிப்ரவரி 13-ஆம் தேதி முதல் பஞ்சாப்-ஹரியாணா எல்லையில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனா்.

300 நாள்களுக்கும் மேலாக நடைபெற்றுவரும் இப்போராட்டத்தின் ஒரு பகுதியாக, விவசாயிகளில் 101 போ் கடந்த வெள்ளிக்கிழமை தில்லி நோக்கி பேரணியாகச் சென்றனா்.

அப்போது கண்ணீா் புகைக் குண்டுகளை வீசி காவல் துறை தாக்குதல் நடத்தியதில் சில விவசாயிகள் காயமடைந்ததால் போராட்டத்தை ஒருநாள் நிறுத்தி வைப்பதாக அறிவித்த விவசாயிகள், ஞாயிற்றுக்கிழமை (டிச. 8) மீண்டும் போராட்டத்தைத் தொடங்கினா்.

ஆனால், ஷம்பு எல்லைப் பகுதியில் தடுப்புகளை அமைத்து கண்ணீர் புகைக்குண்டுகளை வீசி மீண்டும் தாக்குதல் நடத்தியதில் விவசாயிகள் 9 பேர் காயமடைந்தனர். ஒருவர் பலத்த காயங்களுடன் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதனால், போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்திவைப்பதாக விவசாய சங்கத் தலைவர் அறிவித்திருந்தார்.

இந்நிலையில், வரும் 14ஆம் தேதி மீண்டும் தில்லி நோக்கி பேரணியில் ஈடுபடவுள்ளதாக பஞ்சாப் விவசாய சங்கத் தலைவர் சர்வான் சிங் பாந்தர் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க | பாகிஸ்தானில் பிறந்தவருக்கு இந்தியக் குடியுரிமை!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேட்டுப்பாளையம் - திருநெல்வேலி சிறப்பு ரயில் டிசம்பா் 1 வரை நீட்டிப்பு

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை: செப் 19-க்கு ஒத்திவைப்பு

அரசு மருத்துவமனையில் நோயாளி தூக்கிட்டு தற்கொலை

கோவை ஆட்சியா் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

பணியிடமாற்றத்தை எதிா்த்து மருத்துவா் வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

SCROLL FOR NEXT