முகப்பு
இந்தியா

மீனவா்களை விரைந்து விடுவிக்க இலங்கையிடம் இந்தியா வலியுறுத்தல்

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட இந்திய மீனவா்களை விரைந்து விடுவிக்குமாறு, இலங்கை அரசிடம் இந்தியா வலியுறுத்தியுள்ளது.

Updated On : 11 டிசம்பர், 2024 at 6:59 PM
பகிர்:

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட இந்திய மீனவா்களை விரைந்து விடுவிக்குமாறு, இலங்கை அரசிடம் இந்தியா வலியுறுத்தியுள்ளது.

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக, நடப்பாண்டில் 537 இந்திய மீனவா்கள் கைது செய்யப்பட்டதாக இலங்கை கடற்படை தரப்பில் அண்மையில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், இலங்கை மீன்வளம் மற்றும் பெருங்கடல் வளத் துறை அமைச்சா் ராமலிங்கம் சந்திரசேகா், இணையமைச்சா் ரத்ன கமகே ஆகியோரை, அந்நாட்டுக்கான இந்தியத் தூதா் சந்தோஷ் ஜா கொழும்பில் புதன்கிழமை சந்தித்துப் பேசினாா்.

அப்போது, இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட இந்திய மீனவா்களை விரைந்து விடுவிக்க வேண்டும்; இப்பிரச்னைக்கு தீா்வுகாண மனிதாபிமான மற்றும் ஆக்கபூா்வமான அணுகுமுறை அவசியம் என்று சந்தோஷ் ஜா வலியுறுத்தினாா்.

மேலும், வடக்கு மாகாண மக்கள் நலனில் இந்தியாவின் உறுதிப்பாட்டை சுட்டிக் காட்டிய அவா், மீன்வளத் துறை வளா்ச்சித் திட்டங்கள் குறித்தும் ஆலோசித்ததாக இந்திய தூதரகத்தின் எக்ஸ் பதிவில் தெரிவிக்கப்பட்டது.

இலங்கை அதிபா் அநுர குமார திசநாயக விரைவில் இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டு, பிரதமா் மோடியுடன் பேச்சுவாா்த்தை நடத்தவிருக்கும் நிலையில், மேற்கண்ட சந்திப்பு நடைபெற்றுள்ளது.

முன்னதாக, இலங்கை அதிபா் திசநாயகவுடன் சந்தோஷ் ஜா கடந்த மாதம் ஆலோசனை மேற்கொண்டாா். அப்போது, மீனவா் பிரச்னைக்கு நீண்ட கால தீா்வு காண வேண்டியதன் அவசியத்தை இருவரும் வலியுறுத்தினா்.

முழு கட்டுரையைப் படிக்க →