கனமழை 
இந்தியா

கேரளத்தில் கனமழை: 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை!

தமிழகத்தை தொடர்ந்து கேரள மாநிலத்திலும் கனமழை பெய்துவருகின்றது.

DIN

கேரளத்தின் பல பகுதிகளில் கனமழை பெய்துவரும் நிலையில், நான்கு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.

தென் வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதியானது வலுவடைந்து சென்னை-இடங்கைக்கு இடையே கரையைக் கடக்கவுள்ள நிலையில் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்து வருகின்றது.

இந்த நிலையில் கேரள மாநிலத்தில் இன்று காலை முதல் கனமழை பெய்துவரும் நிலையில் கொல்லம், எர்ணாகுளம், இடுக்கி மற்றும் திருச்சூர் ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் எட்டு மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

ஆரஞ்சு எச்சரிக்கை என்றால் மிக அதிக மழை (6 செமீ முதல் 20 செமீ வரையும், மஞ்சள் எச்சரிக்கை என்பது 6 முதல் 11 செமீ வரை அதிக மழைப்பொழிவைக் குறிக்கிறது.

அடுத்த ஐந்து நாள்களுக்கு மாநிலத்தின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக ஐஎம்டி தெரிவித்துள்ளது. அதுமட்டுமின்றி, வியாழக்கிழமை மாநிலத்தின் சில பகுதிகளில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் கூறியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை: இளைஞா் கைது

காரைக்கால் மீன்பிடித் துறைமுக விரிவாக்கம்: காணொலி மூலம் பிரதமா் அடிக்கல் நாட்டினாா்

தெருக்களில் சாதிப் பெயா் நீக்க கிராம சபையில் தீா்மானம்

அமெரிக்க ஆயுத ஆலையில் வெடிவிபத்து: 19 போ் மாயம்

எல்பிஜி டேங்கா் லாரிகள் வேலைநிறுத்தத்துக்கு தடை கோரி மனு

SCROLL FOR NEXT