Photo credit: IANS 
இந்தியா

பிகாரில் இணைப்பு உடைந்ததால் இரண்டாக பிரிந்த சரக்கு ரயில்

பிகாரில் இணைப்பு உடைந்ததால் சரக்கு ரயில் இரண்டாக பிரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

DIN

பிகாரில் இணைப்பு உடைந்ததால் சரக்கு ரயில் இரண்டாக பிரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிகார் மாநிலம், பாகல்பூர்-ஜமால்பூரில் உள்ள கரியா-பிப்ரா ஹால்ட் அருகே சரக்கு ரயிலில் இணைந்து உடைந்ததால் ரயில் இரண்டாக பிரிந்தது. ரயில் இணைப்பு உடைந்த பிறகு, 10 பெட்டிகள் மற்றும் என்ஜின் முன்னோக்கி நகர்ந்தது. அதேசமயம் 20 பெட்டிகள் பின்னால் சென்றன.

ரயில்வே அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து நிலைமையை சரி செய்ய நடவடிக்கை மேற்கொண்டனர். முன்னோக்கி சென்ற 10 பெட்டிகள் கல்யாண்பூர் ரயில் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது. மீதமுள்ள 20 ரயில் பெட்டிகள் சுல்தாங்கஞ்ச் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

இந்திய விண்வெளிப் பொருளாதாரம் அடுத்த 10 ஆண்டுகளில் 3 மடங்கு உயரும்!

கரியா-பிப்ரா நிறுத்தத்தில் உள்ள ரயில் நிலைய மாஸ்டர் முகமது அக்லிப், இச்சம்பவத்தை உறுதிப்படுத்தினார். "சம்பவத்தைப் பற்றி நாங்கள் அறிந்தவுடன், உடனடியாக ஜமால்பூரில் உள்ள மூத்த அதிகாரிகளுக்குத் தெரிவித்தோம். அவர்கள் நிவாரண ரயில் மற்றும் என்ஜினை அனுப்பினர் என்று தெரிவித்தார்.

சனிக்கிழமை காலை 8.58 மணிக்கு நடந்த இந்தச் சம்பவத்தால் அந்த வழித்தடத்தில் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இனி அதிமுக அல்ல, எதிமுக! - TTV Dhinakaran

750 தாமரைகள் கொண்ட மணல் சிற்பம்: பிரதமர் மோடிக்கு பட்நாயக் வாழ்த்து!

Jailer 2 ரிலீஸ் குறித்து Rajinikanth!

மெட்ராஸ் ஐஐடி-ல் புராஜெக்ட் அசோசியேட் பணி

மோடியின் தாயார் ஏஐ விடியோ: உடனே நீக்க காங்கிரஸுக்கு பாட்னா உயர் நீதிமன்றம் உத்தரவு!

SCROLL FOR NEXT