பிரியங்கா காந்தி ANI
இந்தியா

ஒரே நாடு, ஒரே தேர்தல்: கூட்டுக்குழுவுக்கு பிரியங்காவை பரிந்துரைத்த காங்கிரஸ்!

நாடாளுமன்ற கூட்டுக்குழுவுக்கு பிரியங்காவை காங்கிரஸ் பரிந்துரைத்தது பற்றி...

DIN

ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதா குறித்து ஆய்வு செய்யவுள்ள நாடாளுமன்ற கூட்டுக்குழுவுக்கு பிரியங்கா காந்தியை காங்கிரஸ் பரிந்துரைத்துள்ளது.

மக்களவையில் ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதாவை சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்தார்.

இந்த மசோதாவுக்கு காங்கிரஸ், திமுக, சமாஜவாதி உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், வாக்கெடுப்பு மூலம் மசோதாவை தாக்கல் செய்தது மத்திய அரசு. தொடர்ந்து, எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை ஏற்று நாடாளுமன்ற கூட்டுக் குழு ஆய்வுக்கு மசோதாவை அனுப்புவதாக மத்திய அமைச்சர் அறிவித்தார்.

ஆனால், மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா இறுதி முடிவை இதுவரை வெளியிடவில்லை.

நடப்பு குளிர்காலக் கூட்டத்தொடர் வருகின்ற வெள்ளிக்கிழமையுடன் நிறைவடையவுள்ள நிலையில், அதற்கு முன்னதாகவே கூட்டுக்குழு உறுப்பினர்களை இறுதி செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

மொத்தம் 31 பேர் கொண்ட குழுவில் 21 பேர் மக்களவையில் இருந்தும் 10 பேர் மாநிலங்களவையில் இருந்தும் இடம்பெறவுள்ளனர்.

காங்கிரஸ் கட்சியின் மக்களவை உறுப்பினர்கள் பிரியங்கா காந்தி, மனீஷ் திவார் மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் சுக்தேவ் பகத் மற்றும் ரன்தீப் சுர்ஜேவாலா ஆகியோரை கூட்டுக்குழுவுக்கு பரிந்துரைத்துள்ளனர்.

திரிணமூலில் இருந்து கல்யாண் பானர்ஜி, திமுகவில் இருந்து நெல்சன், சமாஜவாதியில் இருந்து தர்மேந்திர யாதவ் ஆகியோர் கூட்டுக்குழுவுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரியங்கா காந்தி வயநாடு எம்பியாக தேர்வு செய்யப்பட்ட பிறகு முதல்முறையாக கூட்டுக்குழுவில் இடம்பெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழகத்தில் நாளைமுதல் எஸ்ஐஆர் பணிகள் புறக்கணிப்பு! வருவாய்த் துறை சங்கம் அறிவிப்பு!

பைசன் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு

பிகாரில் பாஜகவுக்கு எதிராக போராட்டம் வெடித்ததா? உண்மை என்ன?

புத்தகப்பையை சுமந்துகொண்டு 100 முறை தோப்புக்கரணம்: பள்ளி மாணவி பலி

செளதி அரேபியாவில் பேருந்து விபத்து: 42 இந்தியர்கள் பலி!

SCROLL FOR NEXT