ஹரியாணா மாநில முன்னாள் முதல்வர் ஓம் பிரகாஷ் செளதாலா 
இந்தியா

ஹரியாணா முன்னாள் முதல்வர் ஓம் பிரகாஷ் சௌதாலா காலமானார்

ஹரியாணா மாநில முன்னாள் முதல்வர் ஓம் பிரகாஷ் சௌதாலா காலமானார்.

DIN

இந்திய தேசிய லோக் தள தலைவரும் ஹரியாணா மாநில முன்னாள் முதல்வருமான ஓம் பிரகாஷ் சௌதாலா மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 89.

குருகிராமில் உள்ள அவரது இல்லத்தில், இன்று காலை மாரடைப்பு ஏற்பட்டு, உடனடியாக அவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார். ஆனால், அவரைக் காப்பாற்ற முடியவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஓம் பிரகாஷ் சௌதாலா, ஹரியாணா மாநிலத்தின் முதல்வராக 1989ஆம் ஆண்டு முதல் நான்கு முறை பதவி வகித்து சாதனை படைத்தவர். அவர் கடைசியாக மாநில முதல்வராக 1999ஆம் ஆண்டு முதல் 2005ஆம் ஆண்டு வரை பதவி வகித்தது குறிப்பிடத்தக்கது.

இவர் ஹரியாணா மாநிலத்தில் ஐந்து முறை முதல்வராகவும் முன்னாள் துணை பிரதமராகவும் இருந்த சௌதாரி தேவி லால் மகன் ஆவார். இவரது குடும்பம், ஹரியாணா அரசியலில் மிகவும் செல்வாக்கு பெற்றதாக தொடர்ந்து இருந்து வந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பங்குச் சந்தை எழுச்சி: சென்செக்ஸ் 447 புள்ளிகள் உயர்வுடன் நிறைவு!

அதிபர் டிரம்ப்பின் கிறிஸ்துமஸ் விருந்தில் பிரபல பாலிவுட் நடிகை!

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 5

உலகத் தரத்தில் VFX காட்சிகள்! ஆனால் கதை? - AVATAR 3 திரைவிமர்சனம்

தி​ரு​மண பாக்​கி​யம் அரு​ளி​டும் திரு​மால்

SCROLL FOR NEXT