சுரங்கம் -
இந்தியா

உ.பி. கோயில் படிக்கிணற்றில் மிகப் பிரமாண்ட சுரங்க வளாகம் கண்டுபிடிப்பு!

உ.பி. கோயிலில் பழங்காலத்து, மிகப் பிரமாண்ட சுரங்க வளாகம் கண்டுபிடிக்கப்பட்டது பற்றி

DIN

உத்தரப்பிரதேச மாநிலம் சம்பல் மாவட்டத்தில் உள்ள கோயிலின் படிக்கிணற்றைத் தோண்டி ஆய்வு செய்தபோது, அதற்குள் ஒரு மிகப் பிரமாண்டமான சுரங்க வளாகம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியின்போது, மிகப் பெரிய படிக்கிணறும், அதற்குள் சுரங்க வளாகமும் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.

கோயிலில் இருந்த படிக்கிணற்றைச் சுத்தம் செய்து அகழாய்வுப் பணிகள் நடத்தப்பட்டதில் 1957-ல் பயன்படுத்தப்பட்ட இந்த பிரமாண்டமான சுரங்கப் பகுதி தெரிய வந்தது.

இந்த சுரங்கமானது மூன்று நிலைகளைக் கொண்டு, 400 சதுர மீட்டர் அளவுக்குக் கட்டப்பட்டுள்ளது. இதில் ஒரு சில தளங்கள் மார்பிள் கற்களால் கட்டப்பட்டிருக்கிறது என்று சம்பல் மாவட்ட ஆட்சியர் ராஜேந்திர பென்சியா தெரிவித்துள்ளார்.

பிலாரி மன்னரின் தாத்தா காலத்தில் இந்த சுரங்க வளாகம் கட்டப்பட்டிருக்கலாம் என்றும், இந்த சுரங்கம் முழுவதும் மண்ணுக்கடியில் மூடியிருந்ததாகவும் தற்போதைக்கு 210 சதுர மீட்டர் இடம் மட்டுமே வெளியில் இருக்கிறது. சுரங்கம் உள்ள மற்ற பகுதிகள் அனைத்தும் ஆக்கிரமிப்பில் உள்ளது. ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு முழுமையாக அகழாய்வுப் பணிகள் நடக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, இந்தக் கோவில் குறித்துப் பேசிய அர்ச்சகர் மகேந்திர பிரசாத் வர்மா, “இந்தக் கோவிலில் ஒரு கிணறு உள்ளது. அதில் தண்ணீர் இல்லை. ஆனால், அந்தக் கிணறு மூடப்படவில்லை. ஸ்கந்த புராணத்தில் சம்பலில் உள்ள மற்ற புனிதத் தலங்களுடன் இந்தக் கிணறு பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது. கோவிலின் பழைய எல்லை வளாகத்துக்குள் இந்தக் கிணறு அமைந்துள்ளது" என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே, உ.பி. சம்பல் மாவட்டத்தில் 46 ஆண்டுகளுக்கு முன்பு மூடப்பட்ட பழமையான ’பஸ்ம சங்கா்’ (ஸ்ரீ கார்த்திக் மகாதேவ்) கோவில் சில நாள்களுக்கு முன் கண்டுபிடிக்கப்பட்டு திறக்கப்பட்டது. இங்கு நடத்தப்பட்ட ஆய்வுப் பணிகளின் விளைவாக ஐந்து தீர்த்தங்கள், 19 தீர்த்தக் கிணறுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்பகுதி சுமார் 24 ஏக்கரில் அமைந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஓவல் டெஸ்ட்டில் டிஆர்எஸ் சர்ச்சை; கள நடுவர் செய்தது சரியா?

சாலையோரத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரின் சடலம்.. ராஜஸ்தானில் அதிர்ச்சி!

கட்டாய மதமாற்ற வழக்கு: கேரள கன்னியாஸ்திரிகளுக்கு ஜாமீன்

முதல்வர் மீது விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு நம்பிக்கை இல்லை: நயினார் நாகேந்திரன்

வாக்காளர் பட்டியலில் என் பெயர் இல்லை! - தேஜஸ்வி யாதவ் பரபரப்பு குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT