பிரம்மபுத்திரா ஆற்றில் ரூ. 3,000 கோடியில் கட்டப்பட்ட பிரமாண்ட பாலம் திறப்பு!
பிரம்மபுத்திரா மேல் பிரமாண்டம்! ரூ. 3,000 கோடியில் கட்டப்பட்ட பாலம் திறப்பு!
அஸ்ஸாம் மாநிலத்தில் ரூ. 3,030 கோடியில் கட்டப்பட்ட ‘குமார் பாஸ்கர் வர்மா சேது’ பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று(பிப். 14) திறந்துவைத்தார்.
குவாஹட்டி மற்றும் வடக்கு குவாஹாட்டியைப் பிரிக்கும் பிரம்மபுத்திரா ஆற்றின் மேல் மிகப் பிரமாண்டமாக கட்டப்பட்ட இந்தப் பாலம் ஒரே நேரத்தில் 6 வழித்தடங்களில் வாகனங்கள் செல்லும் வசதியுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.
பாலத்தை திறந்து வைத்த பின், அதில் நடைப்பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி பாலத்திலிருந்தபடியே இயற்கை அழகைக் கண்டு ரசித்தார்.
Advertisement
Advertisement
திறப்புவிழாவில் அஸ்ஸாம் ஆளுநர் லக்ஷ்மண் பிரசாத் ஆச்சார்யா, அம்மாநில முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா ஆகியோரும் உடனிருந்தனர்.
PM inaugurates Rs 3,030-cr bridge on Brahmaputra Guwahati
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.