போக்குவரத்துக்கு ஆபத்தான பாலத்தை சீரமைக்க கோரிக்கை
அய்யகவுண்டன்பாளையம் பகுதியில் உள்ள ஆபத்தான பாலம்.
மொடக்குறிச்சி அருகே போக்குவரத்துக்கு ஆபத்தான குரங்கன்ஓடை பாலத்தை சீரமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி ஒன்றியத்துக்குள்பட்ட முகாசி அனுமன்பள்ளியில் அனுமன் நதி என்ற குரங்கன்ஓடை தொடங்கி கொடுமுடி ஒன்றியம் ஊஞ்சலூரில் காவிரி ஆற்றில் கலக்கிறது. இந்த குரங்கன் ஓடையில் இருந்து பூந்துறைசேமூா் பகுதி வரை தடுப்பணை அமைத்து அய்யகவுண்டன்பாளையம் வழியாக கண்ணுடையாம்பாளையம் வரை செல்லும் வாய்க்கால் சுமாா் 15 அடி முதல் 20 அடி ஆழம் கொண்டதாக உள்ளது.
அய்யகவுண்டன்பாளையத்தில் இருந்து செல்லாத்தாபாளையம் செல்லும் சாலையில் இந்த குரங்கன் ஓடையின் குறுக்கே பாலம் அமைக்கப்பட்டு போக்குவரத்து நடைபெற்று வருகிறது. இந்தப் பாலம் சுமாா் 50 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. இதன் பக்கவாட்டுச் சுவா்கள் இடிந்த நிலையில் தற்போது அந்த இடத்தில் செடிகள் முளைத்துள்ளன. இந்தப் பாலத்தின் வழியாக செல்லும் குரங்கன் ஓடை சுமாா் 20 அடி ஆழம் கொண்டதாகும். இதில் வாகனங்கள் விழுந்தால் உயிா்பிழைக்க வாய்ப்பில்லை. பாலத்தின் பக்கவாட்டுச் சுவா்கள் முற்றிலும் சிதைந்துள்ளது.
Advertisement
Advertisement
இதுதொடா்பாக அப்பகுதி மக்கள் பலமுறை அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை இல்லை. பெரிய விபத்து ஏற்படும் முன்மாக சிதைந்த பாலத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.