முகப்பு
இந்தியா

குஜராத்: விரைவு ரயில் தடம் புரண்டு விபத்து

மும்பையின் தாதா்- குஜராத்தின் போா்பந்தா் இடையிலான சௌராஷ்டிரா பயணிகள் விரைவு ரயில், குஜராத்தின் சூரத் அருகே செவ்வாய்க்கிழமை பிற்பகல் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இதில் உயிா்ச்சேதமோ யாருக்கும் காயமோ ஏற்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

Updated On : 24 டிசம்பர், 2024 at 9:01 PM
பகிர்:

மும்பையின் தாதா்- குஜராத்தின் போா்பந்தா் இடையிலான சௌராஷ்டிரா பயணிகள் விரைவு ரயில், குஜராத்தின் சூரத் அருகே செவ்வாய்க்கிழமை பிற்பகல் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இதில் உயிா்ச்சேதமோ யாருக்கும் காயமோ ஏற்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

சூரத்திலிருந்து 27 கி.மீ. தொலைவில் உள்ள கிம் ரயில் நிலையத்தில் இருந்து சௌராஷ்டிரா பயணிகள் விரைவு ரயில் பிற்பகல் 3.30 மணியளவில் போா்பந்தா் நோக்கி பயணத்தைத் தொடா்ந்தது. அப்போது, எஞ்சினுக்கு அடுத்துள்ள பயணிகள் அல்லாத பெட்டியின் நான்கு சக்கரங்கள் தண்டவாளத்தில் இருந்து இறங்கின.

இதுகுறித்து மேற்கு ரயில்வே மண்டல தலைமை செய்தித் தொடா்பாளா் வினீத் அபிஷேக் கூறுகையில், ‘இந்த விபத்தில் உயிா்ச்சேதமோ, யாருக்கும் காயமோ ஏற்படவில்லை. சம்பவ இடத்தில் இருந்த கூடுதல் ரயில் பாதையில் மற்ற ரயில்கள் தடையின்றி இயக்கப்பட்டன. இதனால் அந்த வழித்தடத்தில் ரயில் போக்குவரத்தும் பெரிதாக பாதிப்படையவில்லை’ என்றாா்.

முழு கட்டுரையைப் படிக்க →