இந்தியா

1500 அடி பள்ளத்தில் விழுந்த பேருந்து! 4 பேர் பலி!

உத்தரகண்ட்டில் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, பள்ளத்தில் விழுந்து 4 பேர் பலி, 23 பேர் காயம்.

DIN

உத்தரகண்ட்டில் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, பள்ளத்தில் விழுந்து 4 பேர் பலியாகினர்.

உத்தரகண்ட் மாநிலம் அல்மொரா மாவட்டத்தில் இருந்து, பயணிகள் பேருந்து புதன்கிழமை (டிச. 25) மதியவேளையில் நைனிதல் மாவட்டம் ஹல்ட்வானி பகுதிக்கு இயக்கப்பட்டது. இந்தப் பேருந்தில் ஓட்டுநர், நடத்துநர் உள்பட 27 பேர் பயணித்தனர். இந்த நிலையில் பீம்தால் - ராணிபாக் சாலை வழியாக மலைப்பாங்கான பகுதியில் சென்றபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, 1500 அடி ஆழ பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது.

இந்த சம்பவத்தினையடுத்து, தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், அப்பகுதி மக்களின் உதவியுடன் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு, சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். இருப்பினும், இந்த விபத்தில் குழந்தை, பெண் உள்பட 4 பேர் பலியாகினர். சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களிலும் சிலர் கவலைக்கிடமான நிலையில் உள்ளதாகக் கூறுகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து அறிந்த உத்தரகண்ட் முதல்வர் புஷ்கர் சிங், உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு இரங்கல் தெரிவித்ததோடு, நிவாரணமும் அறிவித்தார். பலியானவர்களின் குடும்பத்துக்கு ரூ. 10 லட்சமும், பலத்த காயமடைந்தவர்களுக்கு ரூ. 3 லட்சமும், லேசான காயமடைந்தவர்களுக்கு ரூ. 15,000 முதல் ரூ. 25,000 வழங்க உத்தரவிட்டுள்ளார். மேலும், இந்த விபத்து தொடர்பாக விசாரணை நடப்பதாகவும் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாமக தலைவராக ராமதாஸ் தேர்வு - தீர்மானம் நிறைவேற்றம்!

கோவை குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு: சூழல் சுற்றுலாத் தளம் இன்று மூடல்!

அலெஹாந்த்ரோ இனாரிட்டு அழைத்தும் வாய்ப்பை மறுத்த ஃபஹத்! ஏன்?

அவசரநிலை காலத்தைவிட இன்று மோசமான நிலைமை: லாலு பிரசாத் யாதவ்

தூய்மைப் பணியாளர் போராட்டம்! பணிநிரந்தரம் கூடாது என்பதுதான் சரி!

SCROLL FOR NEXT