மகாராஷ்டிரத்தில் திருமணம் மீறிய உறவில் இருந்த மனைவியைக் கண்டித்த கணவரை மனைவி கொலை செய்த வழக்கில் பெண் கைது செய்யப்பட்டார்.
புணேவில் பாஜக எம்.எல்.சி.யான யோகேஷ் திலேக் என்பவரின் மாமா சதீஷ் வாக் (51), டிசம்பர் 9 ஆம் தேதியில் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில், சதீஷின் கொலையில் அவரது மனைவி மோகினி வாக் (48) சம்பந்தப்பட்டிருப்பது தெரிய வந்தது. விசாரணையில், சதீஷின் வீட்டில் அக்ஷய் (29) என்பவர் சில ஆண்டுகளாக வாடகைக்கு குடியிருந்தார்.
அந்த சமயத்தில், மோகினிக்கும் அக்ஷய்க்கும் திருமணம் தாண்டிய இருந்துள்ளது. இதனையறிந்த சதீஷ், தனது மனைவி மோகினியைக் கண்டித்துள்ளார்.
இதையும் படிக்க: இந்தியா கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலக்கப்படும்: ஆம் ஆத்மி
தொடர்ந்து, அக்ஷயும் வீட்டைக் காலி செய்துவிட்டு, வேறிடம் சென்றார். இருப்பினும், மோகினிக்கும் அக்ஷய்க்கும் இடையிலான உறவு தொடர்ந்ததை அறிந்த சதீஷ், மோகினியை அடித்து துன்புறுத்தியுள்ளார்.
இந்த நிலையில், சதீஷை கொன்று விடலாம் என்று அக்ஷய் கூறியதையடுத்து, மோகினியும் அக்ஷயும் சேர்ந்து, கூலிப்படையினருக்கு பணம் கொடுத்து சதீஷை கடத்தி கொலை செய்தனர்.
சதீஷை மோகினி கொலை செய்தது உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து, மோகினி உள்பட கூலிப்படையினர் 4 பேரும் கைது செய்யப்பட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.