பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா 
இந்தியா

மன்மோகன் சிங் இறப்பில் காங்கிரஸ் மலிவான அரசியல் செய்கிறது: பாஜக குற்றச்சாட்டு

மன்மோகன் சிங் இறப்பில் காங்கிரஸ் அரசியல் செய்வதாக பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா குற்றச்சாட்டு

DIN

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் இறப்பில் காங்கிரஸ் மலிவான அரசியலில் ஈடுபட்டு வருவதாக பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா குற்றச்சாட்டு வைத்துளார்.

நாட்டின் முதல் சீக்கிய பிரதமரான மன்மோகன் சிங் இறுதிச் சடங்கிற்கு தனி இடம் ஒதுக்காமல் பாஜக அவமதித்ததாக காங்கிரஸ் கட்சியினர் குற்றச்சாட்டு வைத்ததற்கு பதிலளிக்குமாறு பாஜக தலைவர் ஜே.பி.நட்டா பேசியுள்ளார்.

இதுகுறித்துப் பேசிய ஜே.பி.நட்டா, "முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் தற்போதைய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேயும் முன்னாள் பிரதமரின் இறப்பில் கூட அரசியல் விளையாட்டு விளையாடுவதை தவிர்க்கவில்லை என்பது மிகுந்த வருத்தமளிக்கிறது.

மன்மோகன் சிங் உயிரோடு இருந்தபோது அவருக்கு உண்மையான மரியாதையை காங்கிரஸ் ஒருபோதும் வழங்கவில்லை. இப்போது அவரது மரியாதையின் பெயரில் மலிவான அரசியல் செய்கிறார்கள். காங்கிரஸின் இத்தகைய கீழ்த்தரமான சிந்தனையை எவ்வளவு கண்டித்தாலும் போதாது.

மன்மோகன் சிங்கிற்கு நினைவிடம் அமைக்க மத்திய அரசு இடம் ஒதுக்கியுள்ளது. இதுகுறித்து, அவரது குடும்பத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால், காங்கிரஸ் தொடர்ந்து பொய்களைப் பரப்பி வருகிறது.

இத்தகைய மலிவான அரசியலில் ஈடுபடுவதை ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே உள்பட பிற காங்கிரஸ் தலைவர்கள் தவிர்க்க வேண்டும்” என்று தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரோஹிங்கயாக்கள் இன அழிப்பு: மியான்மருக்கு எதிராக விசாரணை தொடக்கம்!

போலி ஆவணங்கள் மூலம் வெளிநாட்டில் இருந்து திருச்சி வந்தவா் கைது

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜிஎஸ்டி சாலைப் பகுதிகளில் போக்குவரத்து மாற்றம்

இன்று இந்தியா ஓபன் 2026 பாட்மின்டன் தொடக்கம்: 256 வீரா், வீராங்கனைகள் பங்கேற்பு!

சுஸுகி மோட்டாா்சைக்கிள் விற்பனை 26% உயா்வு!

SCROLL FOR NEXT