இந்தியா

ஹேமந்த் சோரனை 5 நாள் காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி!

DIN

நிலமோசடி தொடர்புடைய பணமோசடி வழக்கில் தைதான ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனை ஐந்து நாள் காவலில் வைத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு ராஞ்சி சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவிட்டது. 

அரசு நிலங்களை அபகரித்ததாகவும், தனியாருக்கு விற்றதாகவும் ஜாா்க்கண்ட் முதல்வரும், ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா (ஜேஎம்எம்) கட்சித் தலைவருமான ஹேமந்த் சோரன் மீது சுமார் ரூ.600 கோடி நில மோசடி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் ஐஏஎஸ் அதிகாரி சாவி ரஞ்சன் உள்பட 14 போ் இதுவரையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனிடம் நடத்திய 7 மணி நேர விசாரணைக்குப் பின்னர்,  கடந்த புதன்கிழமை அமலாக்கத் துறையினரால் சோரன் கைது செய்யப்பட்டார். நேற்று ஒரு நாள் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டார். 

இதையடுத்து, ஹேமந்த் சோரனை 5 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு சிறப்பு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை அனுமதியளித்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெற்றிமாறன் தயாரிப்பில் கவின், ஆண்ட்ரியா!

திருப்பதியில் 24 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம்!

ஹரியானாவில் பேருந்து தீப்பிடித்ததில் 8 பேர் பலி, 20-க்கும் மேற்பட்டோர் காயம்

கோட் படத்தின் விஎஃப்எக்ஸ் காட்சிகள் நிறைவு!

கனமழை எச்சரிக்கை: குற்றாலம் அருவிகளில் குளிக்க 5 நாள்கள் தடை

SCROLL FOR NEXT