இந்தியா

குஜராத்தில் ஆட்சேபனைக்குரிய கருத்துகளை பேசி விடியோ வெளியீடு - இஸ்லாமிய மத போதகரை கைது செய்ய நடவடிக்கை

DIN

புது தில்லி : குஜராத்தில் பொதுக்கூட்டத்தில் ஆட்சேபனைக்குரிய கருத்துகளை பேசிய இஸ்லாமிய மதபோதகரின் விடியோவை வெளியிட்ட இருவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

குஜராத்தின் ஜுனாகத் பகுதியில் கடந்த மாதம் 31-ஆம் தேதி  நடைபெற்ற ஒரு பொதுக்கூட்டத்தில் மும்பையை சேர்ந்த இஸ்லாமிய மத போதகர் முப்தி சல்மான் அஸாரி பேசிய விடியோ சமூக வலைதளங்களில் தீயாய் பரவியது. அந்த விடியோவில் அவர் ஆட்சேபனைக்குரிய கருத்துகளை பேசியிருப்பதாக புகார் எழுந்த நிலையில், அவர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.

மேலும், நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்த உள்ளூரை சேர்ந்த முகமது யூசுப் மாலெக் மற்றும் ஆஸிம் ஹபிப் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டு அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.   

முன்னதாக, இந்நிகழ்ச்சிக்கு காவல்துறையிடம் அனுமதி பெறும் போது, மத போதகர் அஸாரி, மத நல்லிணக்கம் மற்றும் அடிமைப் பழக்கங்களில் இருந்து விடுபடுவது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் உரையாற்றப் போவதாக தெரிவித்து, அதற்கான நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக கூறி அனுமதி வாங்கியுள்ளனர். இந்நிலையில், அங்கு மத போதகர் அஸாரி வெறுப்பு கருத்துகளை பேசிய விடியோ வெளியான நிலையில், அவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பரமத்தி வேலூரில் ரூ. 45 ஆயிரத்துக்கு தேங்காய் ஏலம்

கிராமப்புற மக்கள் நலனுக்கான மருத்துவ வாகனம் தொடக்கம்

விவேகானந்தா கல்வி நிறுவனங்கள் வளாகத்தில் நான் முதல்வன் ‘கல்லூரி கனவு -2024’ நிகழ்வு

உயா்கல்வி முடித்து தொழில்முனைவோராக மாற வேண்டும்

ஞானோதயா இண்டா்நேஷனல் பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்

SCROLL FOR NEXT