முகப்பு
இந்தியா

35 வயது பெண் பாலியல் வன்கொடுமை: பக்கத்து வீட்டுக்காரர் கைது

பெண் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Updated On : 9 பிப்ரவரி, 2024 at 1:41 PM
பகிர்:

மேற்கு தில்லி நரைனா பகுதியில் 35 வயது பெண்ணை அவரது பக்கத்து வீட்டில் உள்ளவர், பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதாக காவலர்கள் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

குற்றம் சாட்டப்பட்டவர் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளார். 

இந்த வன்கொடுமை சம்பவம் ஜன.28-ம் தேதி நடந்ததாகவும் அதே நாளில் பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் அடிப்படையில் குற்றம் சாட்டப்பட்டவர் கைது செய்யப்பட்டுள்ளார். புகார் பெறப்பட்ட நாளே முதல் தகவலறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஜன.31 அன்று பெண்ணின் வாக்குமூலம் ஐ.பி.சி 164 பிரிவின் கீழ் பதிவு செய்யப்பட்டது. 

பிப்.2 அன்று மருத்துமனையில் பாதிக்கப்பட்ட பெண் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டதும் அவர் புகாரில் குறிப்பிட்டவையும் உண்மையென உறுதி செய்யப்பட்டு புதிய தகவலறிக்கை பதிவு செய்ததாக காவலர்கள் தெரிவித்தனர்.

இந்த வழக்கில் விசாரணை நடைப்பெற்று வருவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

முழு கட்டுரையைப் படிக்க →