பிரிட்டன் அரசர் குணமடைய வாழ்த்திய இந்திய பிரதமர்!
பிரிட்டன் அரசர் மூன்றாம் சார்ல்ஸூக்கு புற்றுநோய் ஏற்பட்டிருப்பதைத் தொடர்ந்து இந்திய பிரதமர் மோடி, அவர் விரைவில் குணமடைய வாழ்த்தியுள்ளார்.
பிரிட்டன் அரசர் மூன்றாம் சார்ல்ஸூக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக பக்கிங்காம் அரண்மனை தெரிவித்ததைத் தொடர்ந்து, அவர் விரைவில் குணமடைய வாழ்த்துவதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்ட அவர், 'பிரிட்டன் மன்னர் மூன்றாம் சார்ல்ஸ் விரைவில் குணமடைய இந்திய மக்கள் வாழ்த்துகிறோம்' எனக் கூறியுள்ளார்.
கடந்த வாரம் உடல்நிலைக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்னருக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டது. இதை பக்கிங்காம் அரண்மனை கடந்த திங்கள் கிழமை தெரிவித்ததைத் தொடர்ந்து மோடி இந்தப் பதிவைப் பகிர்ந்துள்ளார்.
Advertisement
இதையும் படிக்க: பிரிட்டன் மன்னர் மூன்றாம் சார்லஸுக்கு புற்றுநோய்!
மன்னருக்கு உரிய சிகிச்சைகள் அளிக்கப்பட்டுவருவதாகவும், விரைவில் அவர் குணமடைந்து மக்கள் பணியில் ஈடுபடுவார் எனவும் அரண்மனை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.