இந்தியா

என்னை ஒரு பயங்கரவாதியைப் போல நடத்துகிறது மத்திய அரசு: கேஜரிவால்

DIN

பாஜக தலைமையிலான மத்திய அரசு தனக்கு எதிராக அனைத்து மத்திய அமைப்புகளையும் திருப்பிவிட்டதாக தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் குற்றம் சாட்டினார். 

துவாரகாவில் கட்டப்பட்ட பள்ளிக் கட்டத்துக்கு அடிக்கல் நாட்டினார். அப்போது அவர் கூறியது, 

தில்லியில் உள்ள அனைத்தையும் நிறுத்த மத்திய அரசு முயற்சிக்கிறது. தில்லியில் உள்ள மக்களுக்கு வீட்டு வாசலில் நியாய விலை பொருள்களை வழங்க நாங்கள் விரும்பினோம், ஆனால் மத்திய அரசு அதை நிறுத்தியது. 

ஆனால், கடவுளின் அருளால் பஞ்சாபில் ஆட்சி அமைத்தோம். சனிக்கிழமையன்று பஞ்சாபில் நியாய விலை பொருள்கள் வீட்டுக்கே வழங்குவதற்கான திட்டத்தை நாங்கள் தொடங்குவோம் என்று அவர் தெரிவித்தார். 

நான் மிகப்பெரிய பயங்கரவாதியைப் போல் மத்திய அரசு எனக்கு எதிராக அனைத்து அமைப்புகளையும் திருப்பிவிட்டுள்ளதாகவும் அவர் கூறினார். 

தனக்கு ஊழல் என முத்திரை குத்தப்பட்டிருப்பதாகவும், தில்லி அரசாங்கத்தால் நடத்தப்படும் மருத்துவமனைகளில் இலவச மின்சாரம் மற்றும் இலவச சிகிச்சை எவ்வாறு வழங்குகிறார் என்பதை அடிக்கோடிட்டுக் காட்டினார். 

நான் ஒரு திருடன் என்கிறார்கள். நீங்கள் சொல்லுங்கள், குழந்தைகளுக்கு இலவசக் கல்வி வழங்குபவர் திருடனா அல்லது அரசுப் பள்ளிகளை மூடுவாரா? என்று கேள்வி எழுப்பினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அண்ணாமலையை கைது செய்ய உத்தரவு? ஆளுநர் மாளிகை விளக்கம்

4-ம் கட்ட தேர்தல்: 3 மணி நிலவரம்!

நிஜாமாபாத்திலும் ஹிஜாப்பை அகற்றக் கோரி பாஜக வேட்பாளர் பிரச்னை!

ஹேமந்த் சோரன் தொடர்ந்த வழக்கில் அமலாக்கத்துறை பதிலளிக்க உத்தரவு!

அதிர்ச்சி தோல்விக்குப் பிறகு பாகிஸ்தான் அசத்தல் வெற்றி!

SCROLL FOR NEXT