முகப்பு
இந்தியா

கண்காட்சியில் தீ: மூவர் காயம்

கண்காட்சியில் தீ விபத்து ஏற்பட்டதால் மூவர் காயமுற்றுள்ளனர்.

Updated On : 11 பிப்ரவரி, 2024 at 4:58 PM
பகிர்:

உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதி மகா மேளா கண்காட்சியில் தீ பற்றியதில் மூவர் காயமடைந்துள்ளனர்.

செக்டர் 5-ல் அமைந்துள்ள கின்னர் அஹாரா முகாமில் இந்த சம்பவம் ஏற்பட்டது.

மேளா பகுதியில் உள்ள கங்கா மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டதாகவும் மேல் சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அவர்கள் கொண்டுசெல்லப்பட்டதாகவும் கண்காட்சி அதிகாரி தெரிவித்துள்ளார்.

தீ, ஒரு மணி நேரத்தில் கட்டுப்படுத்தப்பட்டாலும் ஏராளமான பொருள்கள் சேதமடைந்துள்ளன.

கின்னர் அஹாராவைச் சேர்ந்த ராதிகா திவாரி, உணவு பொருள்கள், படுக்கை, துணிகள் ஆகியவை சேதமடைந்ததாக தெரிவித்தார்.

முழு கட்டுரையைப் படிக்க →