கோப்புப்படம் 
இந்தியா

பசுமை புரட்சியின் தந்தை எம்.எஸ். சுவாமிநாதனுக்கு பாரத ரத்னா விருது!

பசுமை புரட்சியின் தந்தை எம்.எஸ். சுவாமிநாதனுக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 

DIN

பசுமை புரட்சியின் தந்தை எம்.எஸ். சுவாமிநாதனுக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், முன்னாள் பிரதமர்கள் சரண் சிங் மற்றும் நரசிம்ம ராவுக்கு  பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளன. ஒரே நாளில் மூன்று பேருக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளன.

எம்.எஸ். சுவாமிநாதனுக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டதற்கு, பிரதமர் மோடி அவரது எக்ஸ் பக்கத்தில்,  "விவசாயம் மற்றும் விவசாயிகள் நலனில் டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதன் ஆற்றிய மகத்தான பங்களிப்பைப் போற்றும் வகையில், இந்திய அரசு அவருக்கு பாரத ரத்னா விருது வழங்குவது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. 

சவாலான காலங்களில் இந்தியா விவசாயத்துக்கு உதவுவதில் அவர் முக்கிய பங்கு வகித்தார். இந்திய விவசாயத்தை நவீனமயமாக்குவதில் சிறந்த முயற்சிகளை மேற்கொண்டார்.

ஒரு கண்டுபிடிப்பாளராகவும் வழிகாட்டியாகவும், மாணவர்களிடையே கற்றல் மற்றும் ஆராய்ச்சியை ஊக்குவிக்குவித்தார்.

டாக்டர் சுவாமிநாதனின் தொலைநோக்கு பார்வை இந்திய விவசாயத்தை மாற்றியமைத்தது மட்டுமல்லாமல், நாட்டின் உணவுப் பாதுகாப்பு மற்றும் வளமையையும் உறுதி செய்துள்ளது” எனத் தெரிவித்துள்ளார். 

பசுமைப் புரட்சியின் தந்தை என அறியப்பட்ட வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன் கடந்தாண்டு காலமான நிலையில், அவருக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குறைந்த காற்றழுத்த தாழ்வு! மீனவர்கள் கடலுக்குச் செல்ல தடை

கனமழை எச்சரிக்கை! செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து உபரி நீர் திறப்பு அதிகரிப்பு

தங்கம் விலை குறைவு: இன்றைய நிலவரம்!

மேட்டூர் அணை: தண்ணீர் திறப்பு குறைப்பு!

விராலிமலை: விரதத்தை தொடங்கிய ஐயப்ப பக்தர்கள்

SCROLL FOR NEXT