இந்தியா

நாளை அயோத்தி செல்லும் கேஜரிவால், பகவந்த் மான்

DIN

அயோத்தி ராமர் கோயிலுக்கு தில்லி முதல்வர் கேஜரிவால், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் ஆகியோர் நாளை செல்லவுள்ளனர். 

அயோத்தியில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள ராமா் கோயிலில் ஜன.22-ஆம் தேதி மூலவா் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. இக்கோயிலுக்கு நாடு முழுவதிலுமிருந்து ஏராளமான பக்தா்கள் சென்று வருகின்றனர்.

இந்த நிலையில் அயோத்தி ராமர் கோயிலுக்கு தில்லி முதல்வர் கேஜரிவால், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் ஆகியோர் நாளை செல்லவுள்ளனர். இருவரும் தங்களது குடும்பத்தினருடன் சென்று ராமரை தரிசனம் செய்ய உள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.  

முன்னதாக ஜனவரி 22 ஆம் தேதி நடைபெற்ற அயோத்தி ராமர் கோயில் பிரதிஷ்டை நிகழ்விற்கு ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளரும், தில்லி முதல்வருமான அரவிந்த் கேஜரிவாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. 

ஆனால் அவர் அந்த அழைப்பை நிராகரித்தார்.    

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சாம் பித்ரோடா கருத்து - காங்கிரஸ் உறவை துண்டிக்குமா திமுக? மோடி கேள்வி

ஜிவி பிரகாஷின் கள்வன்: ஓடிடி வெளியீட்டுத் தேதி!

ஓ மை ரித்திகா!

பிரதமர் மோடியின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த காங்கிரஸ்! | செய்திகள்: சிலவரிகளில் | 08.05.2024

சாம் பித்ரோடாவின் 'இம்சை' கருத்து! தலைவர்களுக்கு காங்கிரஸ் எச்சரிக்கை!

SCROLL FOR NEXT