முகப்பு
இந்தியா

அயோத்தி செல்லும் சட்டப் பேரவை உறுப்பினர்கள்

முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் அழைப்பின்பேரில் இந்தப் பயணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Updated On : 12 பிப்ரவரி, 2024 at 4:27 AM
உத்தர பிரதேச சட்டப் பேரவை உறுப்பினர்கள் | PTI
பகிர்:

உத்தர பிரதேச சட்டப்பேரவையின் மேலவை மற்றும் கீழவை உறுப்பினர்கள் அயோத்தியில் புதிதாக கட்டப்பட்ட ராமர் கோயிலுக்குப் புறப்பட்டுள்ளதாக துணை முதல்வர் கேசவ் பிரசாத் மெளரியா தெரிவித்துள்ளார்.

சமஜ்வாதி கட்சித் தலைவர்கள் தவிர பெரும்பாலான உறுப்பினர்கள் அயோத்தி செல்ல தங்கள் ஒப்புதலை அளித்துள்ளனர்.

இது குறித்து, “இரண்டு அவைகளின் உறுப்பினர்களும் அயோத்தி செல்ல புறப்பட்டுள்ளனர். யாராவது வரவில்லையெனில் அவர்கள் சமஜ்வாதி கட்சியினர் மட்டுமே” எனத் தெரிவித்தார் கேசவ் பிரசாத் மெளரியா.

முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் அழைப்பின்பேரில் இந்த பயணத்துக்கு அவை தலைவர் சதீஷ் மஹானா, உறுப்பினர்கள் ஆகியோர் பால ராமரைத் தரிசிக்க லக்னோவில் இருந்து புறப்பட்டு சென்றுள்ளனர்.

முதல்வர் நேரடியாக அயோத்தி விமான நிலையத்துக்கு வரவுள்ளார். உயர் ரக பேருந்துகள் அவர்களை ஏற்றிச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

சமஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் அழைப்பை நிராகரித்தார்.

முழு கட்டுரையைப் படிக்க →