ராகுல் காந்தி
ராகுல் காந்தி 
இந்தியா

செயல்பாட்டுக்கு வந்தன காங்கிரஸின் முடக்கப்பட்ட வங்கிக் கணக்குகள்!

DIN

வங்கிக் கணக்குகள் முடக்கம் தொடர்பாக காங்கிரஸ் குற்றம் சாட்டிய ஒரு மணி நேரத்திற்குள் வருமான வரித்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

தேர்தல் நன்கொடை பத்திரம் திட்டத்தை உச்சநீதிமன்றம் நேற்று ரத்து செய்த நிலையில், காங்கிரஸின் அனைத்து வங்கிக் கணக்குகளையும் வருமான வரித்துறையினர் முடக்கியுள்ளனர்.

வருமானவரித்துறைக்கு செலுத்த வேண்டிய ரூ.210 கோடி வரியை காங்கிரஸ் கட்சி செலுத்த தவறியதால் அக்கட்சியின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டன.

காங்கிரஸ் மக்களிடம் இருந்து தேர்தல் நன்கொடை பெறுவதற்காக சமீபத்தில் தொடங்கப்பட்ட இணையதளம் மூலம் பெறப்பட்ட தொகையும் அந்த வங்கிக் கணக்கில் உள்ளதாக அக்கட்சியின் பொருளாளர் அஜய் மக்கான் தெரிவித்தார்.

இந்த நடவடிக்கையை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் வருமானவரித்துறை தீர்ப்பாயத்தில் மேல்முறையீடு செய்தது. கட்சியின் வங்கிக் கணக்குகள் முக்கப்பட்டதால் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட முடியாத சூழ்நிலை உருவாகும் என காங்கிரஸ் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் விவேக் கிருஷ்ணா தன்கா தெரிவித்தார்.

இதையடுத்து, முடக்கப்பட்ட வங்கிக் கணக்குகள் மீண்டும் செயல்பட வருமானவரித்துறை அனுமதி அளித்துள்ளது. மேலும் இந்த வழக்கு பிப்.21-ம் தேதி விசாரிக்கப்படும் என்று தகவல் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய நிகழ்ச்சிகள்

சாத்தூா் பகுதியில் பலத்த மழை

பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவா்களுக்கு இழப்பீடு வழங்க கோரி ஆா்ப்பாட்டம்

பிளவக்கல் பெரியாறு அணைக்கு நீா்வரத்து அதிகரிப்பு

சா்வதேச யோகா போட்டியில்  தங்கம் வென்ற அரசுப் பள்ளி மாணவி

SCROLL FOR NEXT