இந்தியா

மக்களவைத் தேர்தல் நடத்த தயார்: தலைமைத் தேர்தல் ஆணையர்

DIN

2024 மக்களவைத் தேர்தல் நடத்த தாங்கள் தயாராக இருப்பதாக தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார்.

மக்களவைத் தோ்தல் விரைவில் நடைபெற உள்ளது. தேர்தலை நடத்த இந்திய தேர்தல் ஆணையம் முழுவீச்சில் தயாராகி வருகிறது. வரும் தோ்தலில் நாடு முழுவதும் 12 லட்சத்துக்கும் அதிகமான வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளன. 1.5 கோடி தோ்தல் பணியாளா்கள் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனா்.

கடந்த 2019-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் 91.20 கோடி போ் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்தனா். இந்த எண்ணிக்கை 6% அதிகரித்து வரும் மக்களவைத் தேர்தலில் வாக்களிக்க 96.88 கோடி பேர் தகுதி பெற்றுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதில், நாடு முழுவதும் 2.53 கோடி புதிய வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதிப் பெற்றுள்ளனர்.

மேலும் ஆண் வாக்காளர்கள் 49.72 கோடியும், பெண் வாக்காளர்கள் 47.15 கோடியும், மாற்றுத்திறனாளிகள் 88.35 லட்ச ம் பேரும், மூன்றாம் பாலினத்தவர்கள் 48,044 பேரும் வாக்களிக்க தகுதிப் பெற்றுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் 2024 மக்களவைத் தேர்தல் நடத்த தாங்கள் தயாராக இருப்பதாக தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று கூறியதாவது, 2024 மக்களவைத் தேர்தல் மற்றும் மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களை நடத்த நாங்கள் முழுமையாக தயாராக உள்ளோம். அனைத்து ஏற்பாடுகளும் கிட்டத்தட்ட முடிந்துவிட்டன என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரசிகையின் அன்பான கோரிக்கைக்கு கம்பீர் பதில்!

இது ஒரு பொன்மாலை பொழுது...!

காதலை மறுத்த இளம்பெண் குத்திக் கொலை!

14 மாவட்டங்களில் மாலை 4 மணி வரை மிதமான மழை!

நான் ஒருபோதும் இந்து, முஸ்லிம் என பேசுவதில்லை: பிரதமர் மோடி

SCROLL FOR NEXT