முகப்பு
இந்தியா

ஜேபி நட்டாவை எச்சரித்தாரா அமித்ஷா?

தில்லியில் நடைபெற்று வரும் பாஜக தேசிய கூட்டத்தில் பிரதமர் மோடி, அமித்ஷா உள்ளிட்டோர் பங்கேற்பு.

Updated On : 18 பிப்ரவரி, 2024 at 11:12 AM
பகிர்:

பாஜக தேசிய கவுன்சில் கூட்டம் தில்லியில் இரண்டு நாள் நிகழ்வாக நடைபெற்று வருகிறது.

இரண்டாம் நாளான இன்று பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தலைவர் ஜேபி நட்டா, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.

முதல் நாளின்போது அமித்ஷாவும் ஜேபி நட்டாவும் கூட்டதில் பேச மேடைக்கு இணைந்து வந்தனர். அப்போது, கட்சி நிர்வாகிகளைப் பார்த்து கையசைத்தபடி அமித்ஷா வந்தார்.

அவர், கைகளை இறக்கியதும் ஜேபி நட்டா பாஜக நிர்வாகிகளிடம் கையசைக்க முயன்றார். ஆனால், அதற்குள் அமித்ஷா அவரைத் தடுத்து இருக்கையில் அமர வைத்தார்.

தற்போது, இந்த விடியோ வைரலாகி வருகிறது. அதேபோல், பிரதமர் மோடிக்கு ஆள் உயர மாலையை அணிவித்தபோது மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் ஜேபி நட்டா இருவரும் அந்த மாலைக்குள் வர முயன்றனர்.

இந்த இரண்டு விடியோவைப் பகிர்ந்து, ”பாவம். பிரதமர் பதவிக்கு அடித்துக் கொள்கிறார்கள்போல..” என பலரும் கிண்டலடித்து வருகின்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →