முகப்பு
இந்தியா

சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் பிரியங்கா!

ராகுலின் நடைப்பயணத்தில் பங்கேற்க திட்டமிட்டிருந்த நிலையில் பிரியங்காவுக்கு உடல்நலக்குறைவு.

Updated On : 19 பிப்ரவரி, 2024 at 12:42 PM
பிரியங்கா காந்தி
பகிர்:

காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி மருத்துவமனையில் இன்று (பிப். 19) காலை அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை முடிந்து அவர் வீடு திரும்பியதாக தகவல் வெளியாகியுள்ளது.

உடல் நீரிழப்பு மற்றும் வயிற்றுத் தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராகுல் காந்தி தலைமையிலான நடைப்பயணத்தில் இன்று பங்கேற்க திட்டமிட்டிருந்த நிலையில் பிரியங்கா காந்திக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

உடல்நலக் குறைவால் தில்லியிலுள்ள தனியார் மருத்துவமனையில் இன்று காலை அனுமதிக்கப்பட்டார். பிகாரிலிருந்து உத்தரப் பிரதேசத்திற்கு நுழைய இருந்த ராகுலின் ஒற்றுமை நீதி நடைப்பயணத்தில் பங்கேற்க முடியவில்லை என்றாலும், நடைப்பயணம் தொடர சமூக வலைதளத்தில் பிரியங்கா காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ராகுல் காந்தியின் ஒற்றுமை நீதிப் பயணம் கடந்த மாதம் மணிப்பூரில் தொடங்கியது. அஸ்ஸாம், மேகாலயா, மேற்குவங்கம், ஜார்கண்ட் மாநிலத்தை தொடர்ந்து இன்று காலை பிகாரில் நடைப்பயணம் நடைபெற்றது.

அண்டை மாநிலமான உத்தரப் பிரதேசத்தில் ராகுலின் நடைப்பயணம் இன்று நுழைகிறது. இதில் பிரியங்கா காந்தியும் பங்கேற்க திட்டமிடப்பட்டிருந்தது.

முழு கட்டுரையைப் படிக்க →