இந்தியா

அரசியலமைப்பை மாற்ற துடிப்பவர்களை அதிகாரத்தில் இருந்து அகற்ற வேண்டும்: மல்லிகார்ஜுன கார்கே

DIN

பெங்களூரு: தற்போதுள்ள அரசியலமைப்புச் சட்டத்தை மாற்றுவிட்டு புதிய அரசியலமைப்பை உருவாக்கும் சதி நடப்பதாக ஞாயிற்றுக்கிழமை குற்றம்சாட்டிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, வரவிருக்கும் மக்களவைத் தேர்தலில் நாம் அனைவரும் ஒரே அணியில் ஒருங்கிணைந்து நிற்காவிட்டால், எதிர்காலத்தில் நாட்டில் "சர்வாதிகாரம்" தலைவிரித்தாடுவது உறுதி என எச்சரித்தார்.

கர்நாடக அரசு பெங்களூரு அரண்மை மைதானத்தில் 'அரசியலமைப்பு மற்றும் தேசிய ஒருமைப்பாடு மாநாடு -2024' என்ற தலைப்பில் இரண்டு நாள் மாநாட்டில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கலந்து கொண்டு பேசினார்.

அப்போது, “தற்போதுள்ள சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட அரசியலமைப்பை அகற்றிவிட்டு புதிய அரசியலமைப்பை உருவாக்கும் சதி வேலைகள் நடப்பதாகவும், அதனை மாற்ற துடிப்போரை வரும் மக்களவைத் தேர்தலில் நாம் அனைவரும் ஒரே அணியில் ஒருங்கிணைந்து நின்று எதிர்க்க வேண்டும். அவ்வாறு செய்யாவிட்டால் எதிர்காலத்தில் இந்த நாட்டில் சர்வாதிகாரம் தலைவிரித்தாடுவது உறுதி. நம்முடைய வாழ்கை சர்வாதிகார கும்பலுடனா அல்லது நீதியுடனா என்பதை நீங்களே தீர்மானித்துக்கொள்ளுங்கள்"என கார்கே கூறினார்.

மேலும், 'கை குலுக்குகிறோம், ஆனால் உண்மையில் சமத்துவம் எங்கே?' என தொல் திருமாவளவன் கேள்வி எழுப்புகிறார். இந்திய அரசியலமைப்புச் சட்டம் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது. "அரசியலமைப்பு நிலைத்திருந்தால் இந்த நாட்டின் ஒருமைப்பாடு நிலைத்திருக்கும். ஜனநாயகம் நிலைத்திருந்தால் அனைவரும் செழிப்புடன் வாழ முடியும். ஆனால் இன்று சமத்துவத்துவத்தை வலியுறுத்தும் அரசியலமைப்பைப் பாதுகாக்கும் அல்லது அரசியலமைப்பை மனதில் கொண்டு செயல்படும் அரசாங்கம் எதுவும் மத்தியில் இல்லை," என்று அவர் கூறினார்.

அதனால்தான் அரசியலமைப்பைப் பாதுகாப்பதும், அதைக் கடைப்பிடிப்பதும் மிக முக்கியமானது என்று அவர் கூறினார்.

தற்போதுள்ள அரசியலமைப்பு அழித்துவிட்டு புதிய அரசியலமைப்பை உருவாக்கும் சதி நடப்பதாகவும், இதனால் நாட்டுக்கே ஆபத்து ஏற்படும். அவர்களை நாம் அனைவரும் ஒருங்கிணைந்து நின்று அதிகாரத்தில் இருந்து அகற்ற வேண்டும். அவ்வாறு செய்யாவிட்டால் எதிர்காலத்தில் யாரும் வாழ முடியாது. நாட்டில் ஜனநாயகமும், சமத்துவமும் நிலைத்திருக்க வேண்டுமானால் அரசியலமைப்பு பாதுகாக்கப்பட வேண்டும்.

ஒரு குறிப்பிட்ட சித்தாந்தத்தை திணிக்க முயற்சிப்பதன் மூலம் மக்களை தவறாக வழிநடத்தும் முயற்சிகள் குறித்து விழிப்புடன் இருக்க வேண்டும் என்று பொதுமக்களுக்கு கார்கே அழைப்பு விடுத்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருப்பூா் நஞ்சராயன் குளத்தில் செத்து மிதந்த மீன்கள்

அவிநாசி அருகே முறைகேடாக இயங்கிய மருத்துவமனைக்கு பூட்டு

கோவை ரயில் நிலையத்தில் பயணி மயங்கி விழுந்து உயிரிழப்பு

பெங்களூரு உணவக குண்டுவெடிப்பு: கோவையில் இரு மருத்துவா்கள் வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை

ராஜீவ் காந்தி நினைவு தினம் அனுசரிப்பு

SCROLL FOR NEXT