இந்தியா

ஓட்டுநர் இல்லாமல் 80 கி.மீ. பயணித்த ரயில்! அதிர்ச்சி விடியோ!

DIN

காஷ்மீர் மாநிலம் கதுவா ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த சரக்கு ரயில், ஓட்டுநர் இல்லாமலேயே தண்டவாளத்தில் வேகமாக சென்றுள்ளது.

இந்தச் சரக்கு ரயிலை இயக்கி வந்த ஓட்டுநர், ரயிலை கதுவா ரயில் நிலையத்தில் நிறுத்திய உடன் ஹேண்ட் பிரேக் போடாமல் ரயிலிலிருந்து கீழே இறங்கியதாகக் கூறப்படுகிறது.

முறையான பிரேக் இல்லாததால், சரிவாக இருந்த தண்டவாளத்தில் மெல்ல நகர ஆரம்பித்த சரக்கு ரயில் ஒருகட்டத்தில் வேகமெடுத்தது.

பின், ஓட்டுநர் இல்லாமலேயே வேகமாகச் சென்ற அந்த சரக்கு ரயிலை நீண்ட நேர போராட்டத்திற்குப் பின் உஞ்சி பாசி ரயில் நிலையத்தில் நிறுத்தியுள்ளனர்.

79.6 கி.மீ. தூரம் இந்த சரக்கு ரயில் ஓட்டுநர் இல்லாமல் பயணித்ததால் இச்சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து, விசாரணையைத் துவங்கியுள்ளதாக ரயில்வே துறை தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மின்சாரம் பாய்ந்து பெண் உயிரிழப்பு

திருப்பூரில் பிரசவத்தில் பெண்ணுக்கு 3 குழந்தைகள் பிறந்தன

முத்தூரில் குட்கா விற்பனை: கடைக்காரா் கைது

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: விழுப்புரம் மாவட்டத்தில்151 பள்ளிகள் 100% தோ்ச்சி

கடலூரில் ‘கல்லூரிக் கனவு’ நிகழ்ச்சி: ஆட்சியா் தொடங்கிவைத்தாா்

SCROLL FOR NEXT