இந்தியா

இந்திய குடும்பங்களின் மாத செலவு அதிகரிப்பு! எவ்வளவு தெரியுமா?

DIN

கடந்த 20 ஆண்டுகளில் இந்திய கிராமப்புற மற்றும் நகர்ப்புற குடும்பங்களில் மாதாந்திர செலவு அதிகரித்துள்ளது.

மத்திய அரசு வெளியிட்டுள்ள மாதாந்திர வீட்டு உபயோகச் செலவு குறித்த பட்டியலில், நகர மற்றும் கிராமப்புறங்களில் குடும்பங்களின் மாத செலவு எவ்வளவு அதிகரித்துள்ளது என்ற புள்ளிவிவரம் தெரியவந்துள்ளது.

5 ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்திய குடும்பங்களின் வீட்டு உபயோகச் செலவு குறித்து ஆய்வு செய்யப்பட்டு மத்திய அரசால் தரவுகள் சேகரிக்கப்படுகின்றன. எனினும் தற்போது 11 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய குடும்பங்களின் வீட்டு உபயோகச் செலவு குறித்த தரவுகள் வெளியாகியுள்ளன.

அதில், 2022-23 ஆண்டில் கிராமப்புற குடும்பங்களின் மாத செலவு ரூ. 3,773 என்றும் நகர்ப்புறங்களில் ரூ. 6,459 என்றும் தரவுகள் குறிப்பிடுகின்றன.

நகர மற்றும் கிராமப்புற குடும்பங்களுக்கு இடையிலான செலவு இடைவெளி தற்போது குறைந்து வருகிறது. 2011 - 12ம் ஆண்டில் 83.9% ஆக இருந்த செலவு இடைவெளி, 2022 - 23ம் ஆண்டில் 71.2% ஆக குறைந்துள்ளது. இதுவே 2009 - 10ம் ஆண்டில் 88.2%. 2004 - 05ம் ஆண்டில் 90.8% என அதிகரித்து காணப்பட்டது.

கடந்த 18 ஆண்டுகளில் கிராமப்புற குடும்பங்களில் செலவு 6 மடங்கு அதிகரித்துள்ளது. நகர்ப்புற குடும்பங்களைப்போன்று கிராமப்புற குடும்பங்களிலும் அதிக நுகர்வு பொருள்கள் விரும்பப்படுகிறது என்பதையே இந்த புள்ளி விவரம் குறிக்கிறது.

ஆகஸ்ட் 2022 முதல் ஜூலை 2023 வரையிலான காலகட்டத்தில் இந்த தரவுகள் சேகரிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் ஜிடிபி, சில்லறை பணவீக்கம் மற்றும் வறுமை நிலைகள் போன்ற முக்கியமான பொருளாதார மதிப்பீடுகளுக்கு இந்தத் தரவு முக்கியமானது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒவ்வொரு நாளும் போராட்டமாக இருந்தது; டி20 உலகக் கோப்பையில் இடம்பிடித்த இந்திய வீரர் பேச்சு!

கன்னக்குழி அழகே..!

கேஜரிவாலுக்கு உச்சநீதிமன்றம் விதித்துள்ள நிபந்தனைகள்!

மின்னும் ஒளி! சாக்‌ஷி அகர்வால்..

தன்னம்பிக்கை தரும் சேலை...!

SCROLL FOR NEXT