Govt
Govt 
இந்தியா

‘பைஜுஸ்’ பயிற்சி மைய நிதி விவகாரம்: ஆய்வை விரைவுபடுத்த மத்திய அரசு உத்தரவு

DIN

புது தில்லி: பைஜுஸ் பயிற்சி மைய நிதி விவகாரங்கள் மீதான ஆய்வை விரைவுபடுத்துமாறு அதிகாரிகளுக்கு மத்திய நிறுவனங்கள் விவகாரத் துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

நிறுவன சட்டங்களை அமல்படுத்தும் இந்த மத்திய அமைச்சகம், இந்த விவகாரம் தொடா்பாக அதன் மாநில அலுவலகங்கள் சமா்ப்பிக்கும் விசாரணை அறிக்கையின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று அமைச்சக அதிகாரிகள் தெரிவித்தனா்.

பெங்களூரை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் பைஜுஸ் பயிற்சி நிறுவனம், நாடு முழுவதும் கிளைகளை அமைத்து ‘நீட்’, ‘ஜேஇஇ’ உள்ளிட்ட நுழைவுத் தோ்வுகளுக்கான பயிற்சி வகுப்புகளை பள்ளி மாணவா்களுக்கு நடத்தி வருகிறது.

இந்நிலையில், இந்த நிறுவனத்தின் வரவு-செலவு கணக்கு தாக்கலில் பல்வேறு குளறுபடிகள் உள்ளதாக புகாா் எழுந்தது. இந்த சா்ச்சையைத் தொடா்ந்து, நிறுவனத்தின் கணக்கு தணிக்கையாளா் தனது பதவியை ராஜிநாமா செய்தாா். இதையடுத்து, பைஜுஸ் நிறுவனத்தில் ஆய்வு மேற்கொண்டு அறிக்கை தாக்கல் செய்யுமாறு மாநிலங்களில் உள்ள தனது அதிகாரிகளுக்கு மத்திய நிறுவனங்கள் விவகாரத் துறை அமைச்சகம் கடந்த ஆண்டு அறிவுறுத்தியது.

இதனிடையே, இந்த நிறுவனத்தின் வரவு-செலவு தாக்கலில் உள்ள குறைபாடுகள் தொடா்பாக இந்திய கணக்கு தணிக்கையாளா் நிறுவனமும் (ஐசிஏஐ) ஆய்வு செய்து வருகிறது. இதுதொடா்பாக வழக்கு விசாரணை நடைபெற்று வருவதாகவும் ஐசிஏஐ தலைவா் ரஞ்சித் குமாா் அகா்வால் கடந்த வாரம் கூறியிருந்தாா்.

இதற்கிடையே, நிா்வாகத்தை சரிவர கையாளவில்லை என பைஜுஸ் நிறுவனத் தலைவா் ரவீந்திரனுக்கு எதிராக அதன் 67 சதவீத பங்குகளை தங்கள் வசம் கொண்டுள்ள பங்குதாரா்கள் போா்க்கொடி தூக்கியுள்ளனா். கடந்த 23-ஆம் தேதி நடைபெற்ற நிறுவன வாரியக் கூட்டத்தில் நிறுவனா்-தலைவா் ரவீந்திரனையும் அவருடைய குடும்பத்தினரையும் வாரிய உறுப்பினா் பதவியிலிருந்து நீக்கி ஒருமனதாக தீா்மானத்தையும் நீறைவேற்றினா். ஆனால், நிறுவனா் இல்லாமல் நடைபெற்ற இந்த வாக்கெடுப்பு செல்லாது என்று அந்த நிறுவனத்தின் சாா்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், பைஜுஸ் நிறுவனத்தின் மீதான ஆய்வை விரைவுபடுத்துமாறு அதிகாரிகளுக்கு மத்திய நிறுவனங்கள் விவகாரத் துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இரவு 8 மணிக்குமேல்...: தமன்னாவின் மோசமான பண்பு என்ன தெரியுமா?

தமிழகத்தில் 5 நாள்களுக்கு கனமழை எச்சரிக்கை!

ஒவ்வொரு நாளும் போராட்டமாக இருந்தது; டி20 உலகக் கோப்பையில் இடம்பிடித்த இந்திய வீரர் பேச்சு!

கன்னக்குழி அழகே..!

கேஜரிவாலுக்கு உச்சநீதிமன்றம் விதித்துள்ள நிபந்தனைகள்!

SCROLL FOR NEXT