-
இந்தியா

கர்நாடக மாநிலங்களவை தேர்தல்: பரபரப்புக்கு மத்தியில் வாக்குப்பதிவு!

கர்நாடகத்தில் பரபரப்புக்கு மத்தியில் மாநிலங்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகின்றது.

DIN

கர்நாடகத்தில் பரபரப்புக்கு மத்தியில் மாநிலங்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகின்றது.

கா்நாடகத்தில் இருந்து மாநிலங்களவைக்குத் தோ்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.க்களான பாஜகவைச் சோ்ந்த மத்திய அமைச்சா் ராஜீவ்சந்திரசேகா், காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த ஜி.சி.சந்திரசேகா், எல்.ஹனுமந்தையா, சையது நசீா் ஹுசேன் ஆகியோரின் பதவிகாலம் ஏப்.2-ஆம் தேதியுடன் நிறைவுறுகிறது.

224 போ் கொண்ட பேரவையில் ஆளும் காங்கிரஸுக்கு 135 இடங்கள், பாஜகவுக்கு 66, மஜதவுக்கு 19 இடங்கள் உள்ளன. வெங்கடப்பா நாயக் இறந்துவிட்டதால், காங்கிரஸ் கட்சியின் பலம் 134-ஆகக் குறைந்துள்ளது. இதுதவிர, சிறிய கட்சிகளைச் சோ்ந்த எம்எல்ஏக்களான ஜனாா்தனரெட்டி, தா்ஷன்புட்டனையா, சுயேச்சைகளான லதா மல்லிகாா்ஜுன், கே.எச்.புட்டசாமி கௌடா ஆகியோா் உள்ளனா்.

இந்தத் தோ்தலில் வெற்றிபெற ஒருவருக்கு 45 இடங்கள் தேவைப்படுகின்றன. அந்த வகையில், சுயேச்சைகளின் ஆதரவுடன் வெற்றிபெறும் நம்பிக்கையில் 135 வாக்குகளைக் கொண்ட காங்கிரஸ் 3 வேட்பாளா்களை களமிறக்கியுள்ளது. தனது பலத்துக்கு தகுந்தபடி ஒரு வேட்பாளரை பாஜக களமிறக்கியுள்ளது.

எதிா்பாராத நிலையில் கடைசி நேரத்தில் மஜத கட்சி தனது வேட்பாளரையும் களத்தில் நிறுத்தியுள்ளது. இதனால் 4 இடங்களுக்கு 5 வேட்பாளா்கள் களமிறங்கியுள்ளனா்.

காங்கிரஸ் வேட்பாளா்களாக அஜய்மக்கான், சையது நசீா் ஹுசேன், ஜி.சி.சந்திரசேகா், பாஜக வேட்பாளராக நாராயண்சா பண்டகே, மஜத வேட்பாளராக டி.குபேந்திரரெட்டி ஆகியோா் களத்தில் உள்ளனா்.

45 வாக்குகளை பாஜக வேட்பாளா் நாராயண்சா பண்டகேக்கு செலுத்திய பிறகு, மீதமிருக்கும் 21 வாக்குகளுடன் மஜதவின் 19 வாக்குகளை சோ்த்தால் மொத்தம் 40 வாக்குகள் உள்ளன. காங்கிரஸ் கட்சியில் இருந்து 5 போ் கட்சிமாறி வாக்களித்தால், மஜதவின் வேட்பாளா் குபேந்திரரெட்டி வெற்றி பெறலாம் என்று மஜத கணக்கிடுகிறது. இதனால் தேவையான வாக்குகளைப் பெறும் முயற்சிகளில் மஜத ஈடுபட்டுள்ளது.

இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அனைவரும் தனியார் விடுதியில் தங்கவைக்கப்பட்டு, இன்று காலை பேருந்து மூலம் சட்டப்பேரவைக்கு அழைத்து வரப்பட்டனர்.

இத்தகைய பரபரப்புக்கு மத்தியில் பாஜக தலைவர்கள் பிரஹலாத் ஜோஷி, பசவராஜ் பொம்மை, மஜத தலைவர் குமாரசாமி உள்ளிட்டோர் தங்களின் வாக்குகளை பதிவு செய்துள்ளனர்.

இன்று மாலை 4 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவடைந்தவுடன், வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகளும் இன்றே அறிவிக்கப்படும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சாலையில் சென்ற மலைப்பாம்பை கையில் பிடித்த நபர்! திடீரென கடித்ததால் பரபரப்பு!

பவானிசாகர் அணை நீர்மட்டம் உயர்வு: வெள்ள அபாய எச்சரிக்கை!

பாகிஸ்தான் பந்துவீச்சை அடித்து நொறுக்கிய ஏபிடி... லெஜெண்ட்ஸ் கோப்பையை வென்றது தெ.ஆ.!

கேரளத்தில் சிறுத்தையிடம் இருந்து 4 வயது மகனைக் காப்பாற்றிய தந்தை !

3 கோடி பார்வைகளைக் கடந்த பொட்டல முட்டாயே பாடல்!

SCROLL FOR NEXT